மாணவர்களே ரெடியா?. நாளை வெளியாகும் நீட் UG தேர்வு முடிவுகள்!. இந்தியாவின் டாப் 10 மருத்துவக் கல்லூரிகளின் பட்டியல் இதோ!

Neet UG results

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 4ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள காத்திருக்கின்றன. ஏற்கனவே, இதற்கான ஆன்சர் கீ ஏற்கனவே வெளியான நிலையில், முடிவுகள் இன்னும் 2 நாட்களில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்து. மேலும், அடுத்த இரண்டு நாட்களில் நீட் தேர்வு முடிவுகள் 2025 வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகாரப்பூர்வ புதுப்பிப்பின்படி, நீட் UG முடிவுகள் நாளை (ஜூன் 14) அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும், இளங்கலைப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்கள் NTA NEET இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான neet.nta.nic.in இல் முடிவுகளைப் பார்க்கலாம்.

இந்தநிலையில், நீட் தேர்வு முடிவுகள் 2025 அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் உள்ள சிறந்த மருத்துவக் கல்லூரிகள் குறித்து அறிந்துகொள்ளலாம். அதாவது, அகில இந்திய தரவரிசை 2024 இன் படி, வெளியிடப்பட்ட பட்டியலில் சிறந்த மருத்துவ கல்லூரிகளை தேர்ந்தெடுக்கலாம். தரவரிசையின் முதலிடத்தில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) டெல்லி அமைந்துள்ளது.

தரவரிசை 2: முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (PGIMER), சண்டிகர்.

தரவரிசை 3: கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, வேலூர்

தரவரிசை 4: தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம், (நிம்ஹான்ஸ்) பெங்களூரு

தரவரிசை 5: ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்), புதுச்சேரி.

தரவரிசை 6: சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம் (SGPIMS), லக்னோ

ரேங்க் 7: பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (BHU), வாரணாசி

8வது இடம்: அமிர்தா விஸ்வ வித்யாபீடம், கோவை

ரேங்க் 9: கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரி, மணிப்பால்

தரவரிசை 10: மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பொது மருத்துவமனை, சென்னை

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய மருத்துவக் கல்லூரிகள்: தமிழ்நாட்டில் உள்ள சில முக்கிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அவர்களின் NIRF தரவரிசைகள்: Christian Medical College (CMC), Vellore – 3வது இடம்

Amrita Vishwa Vidyapeetham, Coimbatore – 8வது இடம்

Madras Medical College & Government General Hospital, Chennai – 10வது இடம்

Saveetha Institute of Medical and Technical Sciences, Chennai – 12வது இடம்

SRM Institute of Science and Technology, Chennai – 18வது இடம்

Sri Ramachandra Institute of Higher Education and Research, Chennai – 20வது இடம்.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களின் 15% இடங்களைத் தேர்வுசெய்த தகுதியுள்ள மற்றும் வெற்றி பெற்ற தேர்வர்களின் தகுதிப் பட்டியல், NEET (UG) 2025 இல் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் NTA ஆல் தயாரிக்கப்படும். வெற்றி பெற்ற தேர்வர்களின் பட்டியல், இந்திய அரசின் சுகாதார சேவைகள் இயக்குநரகம் (மருத்துவத் தேர்வுப் பிரிவு), சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மற்றும் இந்திய மருத்துவ முறை ஆணையம் (NCISM) மற்றும் தேசிய ஹோமியோபதி ஆணையம் (NCH), ஆயுஷ் அமைச்சகம், இந்திய அரசு ஆகியவற்றிற்கு அனுப்பப்படும்.

Readmore: ஏர் இந்தியா விமான விபத்து.. 242 பேரில் உயிர் பிழைத்த ஒரே ஒரு நபர்.. யார் அந்த அதிர்ஷ்டசாலி?

KOKILA

Next Post

சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சிறுவாபுரி பால சுப்ரமணியர்.. சென்னைக்கு அருகே உள்ள டாப் 5 முருகன் கோயில்..!!

Fri Jun 13 , 2025
சென்னையில் உள்ள முருக பக்தர்கள் எளிதில் சென்று வழிபடுவதற்கு ஏற்ற சக்தி வாய்ந்த முருகன் கோவில்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம். சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சிறுவாபுரி பால சுப்ரமணியர்: சென்னையிலிருந்து 33 கி.மீ. தூரத்தில், கோல்கத்தா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த தலம், சமீப காலமாக மிகுந்த புகழ் பெற்றுவருகிறது. செவ்வாய்கிழமைகளில் இக்கோவிலுக்கு சென்று, சொந்த வீடு கட்ட வேண்டி வேண்டிக்கொண்டால், அடுத்த ஆண்டுக்குள் அந்த கனவு நனவாகும் […]
temple 1 2

You May Like