தமிழ்நாடு அரசின் கனவுத் திட்டங்களில் ஒன்றான புதுமைப் பெண் திட்டம், கல்லூரிப் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கி வருகிறது. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உறுதித் திட்டத்தின் கீழ் 2022-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், பெண் கல்வியை ஊக்குவிப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.
தற்போது, தமிழ்ப் புதல்வன் திட்டம் மற்றும் புதுமைப் பெண் திட்டம் இரண்டிலும் புதிதாக 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளதால், இனி அவர்களுக்கும் மாதம் ரூ.1,000 கிடைக்கும்.
திட்டத்தில் சேருவதற்கான தகுதிகள் என்ன..?
* மாணவிகள் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து, தற்போது தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருக்க வேண்டும்.
* தனியார் பள்ளிகளில் Right to Education (RTE) சட்டத்தின் கீழ் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படித்து, அதன் பிறகு 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளும் இத்திட்டத்தில் பயன்பெறத் தகுதியுடையவர்கள்.
* இளநிலை முதலாம் ஆண்டு சேரும் அனைத்து மாணவிகளும், தொழிற்கல்வி அல்லது மருத்துவக் கல்வியின் 2-ஆம் ஆண்டு முதல் 5-ஆம் ஆண்டு வரை பயிலும் மாணவிகளும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
* மற்ற கல்வி உதவித்தொகைகளை பெற்றாலும், புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் இந்த ரூ.1,000 தொகையைப் பெற மாணவிகளுக்கு தகுதி உண்டு.
விண்ணப்பிப்பது எப்படி..?
இத்திட்டத்திற்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளமான http://penkalvi.tn.gov.in வழியாகவே விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், மாணவிகள் தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்க முடியாது. அவர்கள் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் வழியாக மட்டுமே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும். திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு, கட்டணமில்லாத் தொலைபேசி எண் 14417-ஐத் தொடர்பு கொள்ளலாம்.
Read More : கழிப்பறையில் 10 நிமிடங்கள்..!! இதைவிட வேறு ஆபத்து இருக்க முடியாது..!! மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை..!!