பதாகை ஏந்தி நின்ற மாணவிகள்; கோவை விழாவில் பிரதமர் மோடி செய்த நெகிழ்ச்சி செயல்.. வீடியோ!

pm modi covai

கோவை கொடிசியா வளாகத்தில் தென்னிந்திய இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார்.. அப்போது வணக்கம் என்று கூறி தனது உரையை பிரதமர் மோடி தொடங்கினார்.. மேலும் புட்டபர்த்தி விழாவுக்கு சென்றதால் 1 மணி நேரம் தாமதமானதற்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்தார்..


கோவை என்பது கலாச்சாரம், கனிவு, படைப்புத்திறனை தனக்கு சொந்தமாக்கிக் கொண்ட பூமி.. கோவையின் இந்த புனிதமான மண்ணில் மருதமலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானை தலை வணங்குகிறேன். இங்கிருக்கும் ஜவுளித்துறை நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பு அளிக்கக் கூடியது.. கோவையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சிபி ராதாகிருஷ்ணன் தற்போது துணை குடியரசு தலைவராக நம் அனைவருக்கும் வழிக்காட்டிக் கொண்டிருக்கிறார்..

இயற்கை விவசாயம் என்பது மிகவும் சிறப்பான ஒன்று.. தமிழ்நாட்டு அனைத்து விவசாயிகளுக்கும் என் வாழ்த்துக்கள்.. நான் இங்கு பல்வேறு அரங்குகளை பார்த்தேன்… ஒருவர் இயந்திர பொறியியல் வேலையை விட்டு விவசாயத்திற்கு வந்திருக்கிறார், ஒருவர் இஸ்ரோ வேலையை விட்டு விவசாயத்திற்கு வந்திருக்கிறார்.. இவர்கள் பலருக்கும் ஊக்கமளிக்கிறார்கள்.. இங்கு வராமல் இருந்திருந்தால் இயற்கை விவசாயம் குறித்து நிறைய விஷயங்கள் எனக்கு தெரியாமல் போயிருக்கும்..” என்று தெரிவித்தார்..

இயற்கை வேளாண்மைக்கான தலைமையும் தென்னிந்தியா தான் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.. இந்த மாநாடு தேசத்தின் இயற்கை வேளாண்மைக்கு ஒரு புதிய திசையை காட்டும்..” என்று தெரிவித்தார்..

அப்போது அந்த கூட்டத்தில் பள்ளிக் குழந்தைகள் பதாகைகளை வைத்திருந்தனர்.. அதில் “ நான் ரேங்க் 2 பொருளாதாரத்தில் பட்டம் பெறுவேன்.. ரேங்க் 1 பொருளாதாரத்தில் ஓய்வு பெறுவேன்.. உங்கள் தொலைநோக்கு பார்வைக்கு நன்றி..” என்று எழுதப்பட்டிருந்தது..

அதனை கவனித்த பிரதமர் மோடி, அந்த பதாகைகளை ஏந்திய பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.. மேலும் “அந்த கூட்டத்தில் குழந்தைகள் பதாகைகளை ஏந்தி உள்ளனர்.. அதில் எழுதப்பட்டுள்ள வாசகங்களை நான் சீரியஸாக எடுத்துக் கொள்கிறேன்.. பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவர்கள் அந்த பதாகைகளை வாங்கிக் இங்கேக் கொண்டு வாருங்கள்.. நன்றி குழந்தைகளே.. நீண்ட நேரமாக அதை தூக்கிக் கொண்டு நின்றுக் கொண்டிருந்தீர்கள்.. ரொம்ப நன்றி..” என்று தெரிவித்தார்..

Read More : “பீகார் காற்று இங்கேயும் வீசுகிறதோ என நினைத்தேன்..” கோவையில் பிரதமர் மோடி பேச்சு..!

RUPA

Next Post

18 வருடங்களுக்குப் பிறகு உருவாகும் வினோதமான ராஜயோகம்.. இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..!!

Wed Nov 19 , 2025
A strange Raja Yoga that will form after 18 years.. Wealth will double for these 3 zodiac signs..!!
zodiac

You May Like