மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்றுவிடக் கூடாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..
திருச்சி ஜமால் முகமது கல்லூரி பவள விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது “ உங்களை போன்ற இளம் மாணவர்களை சந்திக்கும் போது எனக்கு எனர்ஜி வந்துவிடுகிறது. மாணவர்கள் அதிகமாக இருக்கும் நிகழ்ச்சி என்றால் உடனே ஓ.கே சொல்லிவிடுவேன்.. இந்த ஜமால் முகமது கல்லூரிக்கு நான் வருவது இது முதன்முறை அல்ல.. ஏற்கனவே 2006-ம் ஆண்டு கல்லூரி நிறுவன நாள் விழாவுக்கு வந்திருக்கிறேன்.. அனைத்து சமுதாய மக்களும் நல்லிணக்கத்துடன் பயில ஜமால் முகமது கல்லூரி வழிவகை செய்துள்ளது. கே.என்.நேரு, எம்.ஆர். கே பன்னீர்செல்வம் இருவரும் உங்கள் சீனியர்ஸ்.. இவர்கள் எங்க கேபினெட்டில் சீனியர்களாக உள்ளனர். நாளை உங்களில் இருந்து ஒருவர் கூட அந்த லிஸ்டில் வரலாம்..
ஓரணியில் தமிழ்நாடு என்று ஒற்றுமையாக நின்றால் தமிழ்நாட்டை யாராலும் வீழ்த்த முடியாது. நான் அரசியல் பேசவில்லை.. மாணவர்களுக்கு நிச்சயம் அரசியல் புரிய வேண்டும் என்று பேசுகிறேன்.. காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என பல வழிகள் உள்ளது.. மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்றுவிடக் கூடாது..
கவ்லிக்கு பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது என்ற புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். எல்லாருக்கும் எல்லாம் என்பது நமது இலக்கு.. இது தான் திராவிட மாடல்..
தமிழ்நாட்டை வளர்த்தெடுக்க மாணவர்களாகிய நீங்கள் ஓரணியில் தமிழ்நாடு என்று திரள வேண்டும்.. நன்றாக படித்து மேலும் உயர வேண்டும்.. அதற்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றைக்கும் துணை நிற்பான்.. இஸ்லாமிய சகோதர்களின் உரிமையாக காக்கும் இயக்கமாக திமுக இருக்கும்.. இது நான் உங்களுக்கு தரும் உறுதி.. கல்வி தான் யாராலும் பறிக்க முடியாத ஒரே சொத்து.. அதற்கேற்ற வசதிகளை வழங்க திராவிட மாடல் அரசு தயாராக உள்ளது..” என்று தெரிவித்தார்.
Read More : நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீரென புகை.. அலறிய பயணிகள்..!! என்ன நடந்தது..?