பிரதமர் மோடியின் பேரணியில் பங்கேற்ற மாணவர்கள்..!! தனியார் பள்ளியின் மீது பாயும் நடவடிக்கை..!!

கோவையில் பிரதமர் மோடி பேரணியில் மாணவர்களை பங்கேற்க வைத்த தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்.19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டுக்கு ஏற்கனவே 5-வது முறை அடுத்தடுத்து விசிட் அடித்த பிரதமர் மோடி, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக கோவையில் நேற்று ரோடு ஷோவில் பங்கேற்றார். இதில், பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்து பங்கேற்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தேர்தல் ஆணைய விதிகள் மீறி பிரதமர் பேரணியில் பள்ளி மாணவர்களை பங்கேற்க வைத்ததற்கு பல்வேறு தரப்பிடம் இருந்து கடும் கண்டனம் எழுந்தது. இந்நிலையில், பரப்புரைகளில் குழந்தைகளை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதை சுட்டிக்காட்டி எழுந்த புகாரில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவையில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளியான ஸ்ரீ சாய்பாபா வித்யாலயம் மாணவர்கள் நேற்று மோடி பேரணியில் பங்கேற்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், கோவையில் பிரதமர் மோடி பேரணியில் மாணவர்களை பங்கேற்க வைத்த தனியார் பள்ளி தலைமை ஆசிரியர், பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோவை தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Read More : சினிமாவில் இருந்து விலகல்..!! மேடையில் பகிரங்கமாக அறிவித்த வெண்ணிற ஆடை மூர்த்தி..!! காரணம் இதுதான்..!!

Chella

Next Post

உங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்படும் அபாயம்..!! இன்றே கடைசி நாள்..!! வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை..!

Tue Mar 19 , 2024
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் படி வங்கிகள் தனது வாடிக்கையாளரிடம் சேவைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஆர்பிஐயின் அறிவுறுத்தலின்படி பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது மார்ச் 19ஆம் தேதிக்குள் பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும். இதை முடிக்காத பட்சத்தில் வங்கிக் கணக்கு சேவைகள் பாதிக்கப்படலாம் அல்லது கணக்கு முடக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

You May Like