பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை சார்பாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,715 புதிய ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்; பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் மொழியின் சிறப்பையும், அதில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கிலும் இந்த சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது.
அதேபோல் ஆசிரியர்களே 6 மாதத்தில் உங்களுக்கு பொதுத் தேர்வு வந்துவிடும். எங்களுக்கு பொதுத் தேர்தல் வந்துவிடும். நாங்களும் வெற்றி பெற வேண்டும். நாங்களும் வெற்றி பெற வேண்டும். அரசு விழாவில் அரசியலா என்று நினைக்க வேண்டாம்., நான் அரசியல் பேசவில்லை., அறிவு சார்ந்த விஷயத்தை கொண்டு செல்வதற்காகவே இங்கு பேசுகிறேன் என்றார்.