ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழந்த விவகாரம்: இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

pa ranjith 1

படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சியாளர் உயிரிழந்த வழக்கில், இயக்குநர் பா. ரஞ்சித்துக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நாகை மாவட்டம் விழுந்தமாவடி பகுதியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில், நீலம் தயாரிப்பில் உருவாகி வரும் ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை 13ம் தேதி நடைபெற்றது. இதில் கார் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டபோது ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் சோகமான வகையில் உயிரிழந்தார்.

அப்போது காரை துரத்தும் காட்சியில், வேகமாக காரை ஒட்டி வந்த சண்டைப் பயிற்சியாளர் மோகன் ராஜுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக, அலட்சியத்தால் உயிர்சேதம் ஏற்படுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் கீழையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இயக்குநர் பா.ரஞ்சித், சண்டைக்கலைஞர் வினோத், தயாரிப்பு நிர்வாகி ராஜ்கமல், வாகன உரிமையாளர் பிரபாகரன் ஆகியோர் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மூவர், ஏற்கெனவே பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், கீழ்வேளூர் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இயக்குநர் பா. ரஞ்சித் நேற்று ஆஜரானார். மதியம் 12 மணியளவில் நீதிபதி மீனாட்சி முன்னிலையில் ஆஜரான நிலையில் பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழந்ததை தொடர்ந்து ‘வேட்டுவம்’ படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இப்படத்தில் ‘அட்டக்கத்தி’ தினேஷ் நாயகனாக நடிக்கிறார். மேலும், அசோக் செல்வன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்றும், சோபிதா துலிபாலா நாயகியாக நடிக்கவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படப்பிடிப்பு விரைவில் மீண்டும் தொடங்கும் எனத் தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது.

Read more: பத்ம ஶ்ரீ விருதுகளுக்கு பரிந்துரை செய்ய இன்றே கடைசி நாள்…!

English Summary

Stunt master’s death case: Court orders action against director Pa. Ranjith..!

Next Post

அட்டகாசம்..! 6000 பேருக்கு ரூ.40,000 கடன் வழங்கும் திட்டம்...! யாரெல்லாம் இதில் விண்ணப்பிக்க முடியும்...?

Thu Jul 31 , 2025
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கையருக்கு தனிநபர் கடனுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள், நலிவடைந்த பழங்குடியினர் (PVTG), திருநங்கைகளை (மூன்றாம் பாலினத்தவர்) கொண்டு சிறப்பு சுய உதவிக் குழுக்களை அமைப்பதன் வாயிலாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அவர்களின் வறுமை மற்றும் பாதிப்புகளை குறைத்து, வாழ்வாதாரம் மேம்படுவதற்கான முறையான முயற்சிகளை […]
tn Govt subcidy 2025

You May Like