வாரிசு துணிவு….! அதிக வசூல் சாதனை படைத்தது எந்த திரைப்படம்…?

தமிழ் திரைப்பட ரசிகர்கள் இடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது அஜித் நடித்து நேற்றைய தினம் வெளியான துணிவு திரைப்படமும் அதே போல விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படமும் தான்.


எப்போதும் அஜித், விஜய் என்று இருபெரும் தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படங்கள் ஒரே சமயத்தில் வெளியானால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

அப்படித்தான் நேற்றைய தினம் இந்த 2 திரைப்படங்களும் வெளியானது.

இந்த நிலையில், நேற்றைய தினம் வெளியான இந்த 2 திரைப்படங்களையும் பல பிரபலங்கள் கண்டு களித்திருக்கின்றனர்.

மேலும் இந்த இரு திரைப்படங்களுமே கலவையான விமர்சனங்களை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருக்கின்றனர். ஆகவே இந்த திரைப்படங்களை காண்பதற்கான முன்பதிவு படு ஜோராக நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படங்கள் வெளியான பிறகு அடுத்ததாக என்ன நடக்கும் இந்த திரைப்படங்களின் பாக்ஸ் ஆபீஸ் விவரம் தொடர்பாக பார்க்க வேண்டும் என்று தான் எல்லோரும் நினைப்பார்கள். தற்சமயம் வந்த தகவலின் அடிப்படையில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டுமே 25 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் 22 கோடிக்கு மேலும் வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த இரு திரைப்படங்களின் வெளிநாட்டு வசூல் விவரத்தை வைத்து கண்காணித்தால் தான் யார் முதல் நாளில் அதிக வசூல் சாதனை படைத்தது என்ற விவரம் தெரியவரும்.

Next Post

ஒரே நாளில் சாதனையை முறியடித்த துணிவு..,.!

Thu Jan 12 , 2023
தமிழ் திரை உலகில் முடி சூடா மன்னர்களாக திகழ்ந்து வருபவர்கள் விஜயும், அஜித்தும் இவர்களுடைய நடிப்பில் எந்த திரைப்படம் வெளியானாலும் அது மெகா ஹிட் திரைப்படம் தான். அதன் அடிப்படையில் நேற்று அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்திற்கும், விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்திற்கும் இடையே மிகப் பெரிய போட்டி நிலவி வருகிறது. தமிழ் திரைத்துறையின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் ஹஜ்.வினோத் […]
thunivu update

You May Like