கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் மாமா நேற்று காலமானார். அவருக்கு வயது (72).
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தமிழன் படத்தில் அறிமுகமானாலும் பின்னர் பாலிவுட் பக்கம் சென்றார். பாலிவுட்டைத் தொடர்ந்து அமெரிக்கப் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அவருக்கு பெண் குழந்தையும் உள்ளது. அங்கு ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். பல ஆண்டுகள் இந்தியா பக்கமே வராமல் இருந்த பிரியங்கா சோப்ரா, கடந்த சில ஆண்டுகளாக இந்தியப் படங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்தநிலையில் அவரது வீட்டில் ஒரு சோக நிகழ்வு நடந்துள்ளது. பிரியங்கா சோப்ராவின் மாமாவும், நடிகை மன்னாரா சோப்ராவின் தந்தையுமான ராமன் ராய் ஹண்டா(72) நேற்று காலமானார். உடல்நலக்குறைவால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று உயிர்பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சோப்ரா குடும்பத்திற்கு திரையுலகினர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
Readmore: KGF ரிட்டன்!. 80 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் புகழ்பெற்ற தங்கச் சுரங்கம் மீண்டும் திறப்பு!.