நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய பிறகு, காளியம்மாளின் அடுத்த அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, அவர் விரைவில் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தில் இணையப் போவதாகச் சமீப காலமாக செய்திகள் உலா வந்தாலும், இது குறித்து அவரது தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்தச் சூழலில், காளியம்மாள், பல்வேறு அரசியல் கட்சிகள் தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், தான் எந்தக் கட்சியில் இணைவது என்பது குறித்த முடிவை விரைவில் அறிவிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாகப் போட்டியிடுவேன் என்றும் அவர் உறுதியாகக் கூறியுள்ளார்.
காளியம்மாளுக்கு, பாஜக, திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என பல தரப்பில் இருந்தும் அழைப்புகள் வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், அவர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பக்கம் செல்லவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை அவர் விரைவில் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அவரது இந்த முடிவானது, தமிழக வெற்றிக் கழகத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என அக்கட்சியின் தொண்டர்கள் நம்புகின்றனர்.
Read More : குட் நியூஸ்..!! பெண்களே உடனே அக்கவுண்டை செக் பண்ணுங்க..!! ரூ.1,000 வந்தாச்சு..!!



