உடல் எடையை குறைக்க தேங்காய் மாவை இப்படி சாப்பிட்டு பாருங்க!. எவ்வளவு நன்மைகள் தெரியுமா?

coconut flour 11zon

சாதாரணமாக கோதுமை மாவு, கடலை மாவு, மைதா, அரிசி மாவு போன்ற மாவுகளை தான் பயன்படுத்துவோம். ஆனால் இதைத் தவிர்த்து பயன்படுத்தக்கூடிய பல மாவு வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் தேங்காய் மாவு. தேங்காய் பால் எடுத்த பின்னர் இருக்கும் தேங்காயை உலர வைத்து மென்மையாக அரைத்து பயன்படுத்துவது. பேக்கிங் தொடங்கி பல சமையல் ரெசிபிகளில் இந்த தேங்காய் மாவு பயன்படுத்தலாம். சுவையுடன் உணவுக்கு நல்ல நறுமணம் கொடுக்கும். அந்த தேங்காய் மாவின் ஆரோக்கிய நன்மைகளை இப்பொது உங்களுக்கு சொல்கிறோம்.


குளுட்டன் – பசையம் இல்லாதது: சுத்தமான தேங்காய் மாவு பசையம் இல்லாத உணவு. குறிப்பாக உங்களுக்கு செலியாக் நோய் அல்லது பசையம் ஒவ்வாமை இருந்தால் நீங்கள் இந்த மாவை பயமில்லாமல் பயன்படுத்தலாம். இந்த மாவில் பேக்கிங் செய்து சாப்பிடலாம்.

அதிக நார்ச்சத்து உள்ளது: 100 கிராம் தேங்காய் மாவில் 45 கிராம் வரை நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. பெரியவர்களாகிய நாம் ஒரு நாளைக்கு 30 கிராம் நார்ச்சத்து சாப்பிடுவதை இலக்காகக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர், இது பெருங்குடல் புற்றுநோயின் ஆபத்துகளைக் குறைக்கும்.

இரத்த சர்க்கரை கட்டுப்பாடு: தேங்காய் மாவில் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு- 51 இருப்பதால் கோதுமை மாவை விட இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும், தேங்காய் மாவில் கொழுப்பு மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இது செயல்படுகிறது. இரத்த ஓட்டத்தில் சர்க்கரை வெளியீட்டை மெதுவாக்கும்.

இதய ஆரோக்கியம்: தேங்காய் துருவலை உணவில் சேர்த்துக்கொள்வது கொலஸ்ட்ராலை நிர்வகிக்க உதவும் நார்ச்சத்து அளவை அதிகரிக்கிறது . இருப்பினும், தேங்காய் மாவில் உள்ள கொழுப்பு வகை நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடு என்றுஇது இது கொலஸ்ட்ரால் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு உதவும்.

புரத ஆதாரம்: தேங்காய் மாவு 100 கிராமுக்கு 18 கிராம் புரதத்தின் ஆதாரமாக உள்ளது. இருப்பினும், தேங்காய் மாவில் உள்ள புரதம் ஒரு முழுமையற்ற புரதம், அதாவது நமது அன்றாட உணவில் நமக்குத் தேவையான ஐந்து அத்தியாவசிய அமினோ அமிலங்கள் மட்டுமே உள்ளன. அது இந்த மாவில் முழுமை பெறாது. ஆனால் இது உடலின் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி போன்ற செயல்பாடுகளுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

Readmore: இன்று முதல் அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவைகளை நிறுத்தும் இந்தியா!. என்ன காரணம்?

Saranya

Next Post

விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை படைப்பது ஏன் தெரியுமா..? ஒரு நாட்டையே கொடுமை செய்த அரக்கன் தான் காரணமாம்..!!

Mon Aug 25 , 2025
விநாயகர் சதுர்த்தி என்பது பக்தி பூர்வமாகவும், ஆன்மீக ரீதியாகவும் தமிழர்கள் மத்தியில் மிகவும் முக்கியமான நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வருகிற இந்த தினத்தில், வீடுகளில் பிள்ளையாருக்கு சிறப்பு அலங்காரங்கள், பூஜைகள், நைவேத்தியங்கள் செய்யப்படுகின்றன. அந்த நைவேத்தியங்களில் முதன்மையானது கொழுக்கட்டை மற்றும் மோதகம். ஒரு காலத்தில், ஞானபாலி எனும் மன்னன், விநாயகரின் பக்தராக வாழ்ந்ததாக கூறப்படுகிறது. தினசரி பூஜைகள், தியானங்கள் மூலம் விநாயகரை வழிபட்டு வந்தார். ஆனால், அவரது நாட்டில் […]
Vinayagar Chaturthi 2025

You May Like