குரூப்-4 தேர்வுக்கான உத்தேச விடைகள்… இன்றே கடைசி நாள்…! மிஸ் பண்ணிடாதீங்க…!

group 2 tnpsc 2025

குரூப்-4 தேர்வுக்கான உத்தேச விடைகள் டிஎன்பிஎஸ்சி-யின் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் உரிய ஆவணங்களுடன் இன்று மாலைக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 3,935 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு, கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி நடத்திய இத்தேர்வை 13.48 லட்சம் பேர் எழுதினர். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 3.935 குரூப் 4 பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான தேர்வு முடிவுகள் அடுத்த மூன்று மாதங்களில் வெளியிடப்படும்.

இந்நிலையில், தேர்வுக்கான உத்தேச விடைகள் டிஎன்பிஎஸ்சி-யின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) நேற்று வெளியிடப்பட்டன. இதில் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் உரிய ஆவணங்களுடன் இன்று மாலைக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 7 தேர்வுகள் அறிவிக்கப்பட்டு, இதில் 5 தேர்வுகள் நடைபெற்றுள்ளன. மேலும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ போன்ற தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது. விரைவில் அதற்கான தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

முதலாம் ஆண்டு முதுகலை மாணவர்களுக்கு ஆகஸ்ட் 20-ம் தேதி கல்லூரி திறப்பு...!

Mon Jul 28 , 2025
நடப்பு கல்வி ஆண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடைசி நாள் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்​டில் அரசு கலை அறி​வியல் கல்​லூரி​களில் முதுகலை படிப்பு சேர்க்​கைக்​கான ஆன்​லைன் விண்​ணப்​பப் பதிவுக்கான காலஅவ​காசம் ஜூலை 15-ம் தேதியுடன் முடிவடைந்​த​து. முதல்​வரின் அறி​வுறுத்​தலின் பேரில், மாணவர்​களின் நலன் கருதி கடைசி நாள் ஜூலை 31 வரை நீட்​டிக்​கப்​படு​கிறது. இன்னும் […]
College students 2025

You May Like