வெயில் கால சரும பராமரிப்பு!…. இயற்கை மாய்ஸ்சுரைசர் தயாரிப்பது எப்படி?… அறிந்துகொள்வோம்!

வெயில்காலத்தில் சருமத்தை பராமரிக்க வீட்டிலேயே இயற்கை மாய்ஸ்சுரைசர் தயாரிப்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.


வெயில் காலத்தில் உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அதேபோல், சருமத்தை பராமரிப்பதும் அதே அளவு முக்கியம். சருமம் பிரகாசமாகவும், புத்துணர்ச்சியாகவும் எப்போதும் இருக்க வேண்டும் என்பது தான் பலரின் எதிர்ப்பார்ப்பு..இருந்தப்போதும் பலருக்கு தோல் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும். குறிப்பாக சருமம் சிலருக்கு எண்ணெய் பிசுபிசுப்புடன் அல்லது வறண்டு காணப்படும். எனவே வீட்டில் உள்ள இயற்கை பொருட்களை கொண்டு மாய்ஸ்சுரைசரை எப்படி தயாரிப்பது குறித்து இதில் பார்க்கலாம். அதன்படி, கற்றாழையில் உள்ள எண்ணற்ற மருத்துவ குணங்கள் சருமத்திற்கு மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகளால் சருமம் பாதுகாக்கப்படுகிறது. கற்றாழை மற்றும் கிரீன் டீ கலந்த மாய்ஸ்சரைசர் செய்யும் முறை: முதலில், 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டீஸ்பூன் க்ரீன் டீ கலந்துக்கொள்ள வேண்டும். பின்னர் முகத்தை நன்றாக சுத்தம் செய்து முகத்தில் இந்த மாய்ஸ்சரைசரை நீங்கள் அப்ளே செய்யலாம். இது உங்களது முகத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவியாக உள்ளது.

வறண்ட மற்றும் எரிச்சலூட்டும் சருமத்திற்கு ஓட்ஸ் சிறந்ததாக உள்ளது. இதனுடன் தேனும் கலந்திருக்கும் போது இயற்கையாகவே காற்றில் இருந்து ஈரப்பத்தை ஈர்த்து சருமத்தில் தக்க வைத்துக்கொள்ள உதவியாக உள்ளது.தேன் மற்றும் ஓட்ஸ் மாய்ஸ்சரைசரை வீட்டில் செய்ய, 1 டேபிள் ஸ்பூன் தேன், 2 டேபிள் ஸ்பூன் அரைத்த ஓட்ஸ் மற்றும் போதுமான அளவு தண்ணீர் சேர்ந்து பேஸ்ட் போன்று கலக்கிக்கொள்ள வேண்டும். இதையடுத்து நீங்கள் வீட்டில் தயாரித்த மாய்ஸ்சரைசரை உங்களது சருமத்தில் தடவி, சுமார் 10 முதல் 15 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விட வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவினால் போதும் சருமம் பிரகாசமாக இருக்கும்.

தயிரில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தில் இறந்த செல்களை வெளியேற்றவும், வெள்ளரிக்காய் சருமத்தை ஈரப்பதமாக்கும் பணிகளை செய்கிறது. அரை கப் தயிருடன், அரை கப் வெள்ளக்கரிக்காய் கலந்து முகத்தில் தடவி 15- 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விட வேண்டும். இதையடுத்து குளிர்ந்த நீரினால் முகத்தைக் கழுவ வேண்டும்.சருமத்தை ஈரப்பதமாக்கவும் மென்மையாகவும் வைத்துக்கொள்ள ரோஸ் வாட்டர் பெரிதும் பயன்படுகிறது.கிளிசரின் – தேனைப் போலவே சருமத்தில் ஈரப்பதத்தை ஈர்க்கும் பணிகளையும் மேற்கொள்கிறது. இந்த மாய்ஸ்சரைசரை தயாரிக்க வேண்டும் என்றால், 1/2 கப் ரோஸ் வாட்டருடன் 2 டேபிள் ஸ்பூன் கிளிசரின் கலந்து, பருத்திப் பந்தைப் பயன்படுத்தி முகத்தில் தடவவும்.

1newsnationuser3

Next Post

வாட்டும் வெயில்!... உடல் சூட்டை தணிக்கும் ஆரோக்கிய டிரிங்க்ஸ்!... வீட்டிலேயே தயாரிக்க எளிய டிப்ஸ் இதோ!

Sun Mar 5 , 2023
கோடைக்காலம் தொடங்கவுள்ளதால், இனிவரும் நாட்களில் வெப்பநிலை படிப்படியாக அதிகரிப்பதால், பொதுமக்கள் பல்வேறு உடல் உபாதைகளை எதிர்கொள்ள நேரிடும். வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பு களையும் அதிலிருந்து விடுபடும் வழிமுறைகளையும் பார்ப்போம். கோடை வெயிலால் அதிக வியர்வை வெளியேறும்போது உப்புச் சத்துப் பற்றாக்குறையும் நீர்ச்சத்துப் பற்றாக்குறையும் ஏற்படுகின்றன. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம், வலிப்பு போன்றவை ஏற்படலாம். வெயிலின் தாக்கத்தால் […]
healthy food

You May Like