சூப்பர் அறிவிப்பு..!! முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டை இனி வீட்டில் இருந்தே எடுக்கலாம்..!!

இந்தியாவில் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். டிக்கெட் முன்பதிவு செய்தால், செல்ல வேண்டிய இடத்திற்கு படுக்கை வசதியுடன் கூடிய பெட்டியில் பயணிக்க முடியும் என்பதால் இன்னும் கூட ரயில் பயணத்தின் மீதான மவுசு குறையவில்லை. இந்நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கவுன்ட்டரில் நீண்ட நேரம் காத்திருக்காமல், எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில், யூடிஎஸ் மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் மூலமாக முன்பதிவில்லாத ரயில் டிக்கெட், நடைமேடை டிக்கெட், சீசன் டிக்கெட், மின்சார ரயிகளுக்கான டிக்கெட் ஆகியவற்றை பெறும் வசதி உள்ளது. இருப்பினும், ஜியோ பென்சிங் என்ற கட்டுப்பாடுகள் இருந்ததால் குறிப்பிட்ட எல்லைக்கு வெளியே இருந்து டிக்கெட்களை பதிவு செய்ய முடியாத நிலை இருந்தது. இந்நிலையில், ஜியோ பென்சிங்கின் வெளிப்புற எல்லையை ரயில்வே நிர்வாகம் நீக்கியுள்ளது.

இதனால் யூடிஎஸ் செயலி மூலம் ரயில் நிலையம் உட்பகுதி தவிர வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், டிக்கெட் எடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் பயணம் தொடங்கும் நிலையத்தை அடைந்துவிட வேண்டும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More : மே மாதம் எத்தனை நாட்கள் வங்கிகள் இயங்காது தெரியுமா..? வாடிக்கையாளர்களே நோட் பண்ணிக்கோங்க..!!

Chella

Next Post

IIT JAM 2024 நுழைவுத் தேர்விற்கான பதிவு ஏப்ரல் 29 வரை நீட்டிப்பு.!! ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி.? முழு விவரம்.!!

Fri Apr 26 , 2024
IIT JAM 2024: ஐஐடி ஜாம் 2024 நுழைவுத் தேர்விற்கு பதிவு செய்வதற்கான செயல்முறையை ஏப்ரல் 29 வரை நீட்டித்திருப்பதாக இந்திய தொழில் நுட்பக் கழகம்(ஐஐடி) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்து இருக்கிறது. ஜாம் 2024 தேர்விற்கு இன்னும் விண்ணப்பிக்காத விண்ணப்பதாரர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம். ஐஐடி ஜாம்(IIT JAM 2024) தேர்வின் அதிகாரப்பூர்வ இணையதளமான jam.iitm.ac.in என்ற முகவரிக்கு சென்று தாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்கவும். ஐஐடி கல்வி நிறுவனத்தில் முதுகலை […]

You May Like