வேலை இல்லா இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு… நாளை நடக்கும் இலவச முகாம்…! மிஸ் பண்ணிடாதீங்க…!

Job 2025 3

தருமபுரி மாவட்டத்தில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார்துறை நிறுவனங்களும் – தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துகொள்ளும் “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நடைபெறுகிறது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவச பணியே ஆகும். இதன் மூலம் தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு. அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.


இம்முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு. விற்பனையாளர். மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், சூப்பர்வைசர். மேலாளர். கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், அக்கவுண்டன்ட், மெக்கானிக் போன்ற பணிகளுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். பள்ளிப்படிப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு என பல்வேறு கல்வித்தகுதிக்கும் ஆட்கள் தேவை என தனியார்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஆகவே, மேற்படி பணிகளுக்கு. தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும், வருகின்ற 19.09.2025 காலை 10 மணிக்கு, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ள, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

இந்த நம்பரை உங்கள் ATM PIN நம்பராக வைத்துள்ளீர்களா?. உடனே மாற்றுங்கள்!. பேங்க் பேலன்ஸ் காலியாகிவிடும் ஆபத்து!

Thu Sep 18 , 2025
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஏடிஎம் கார்டுகள் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துவது சர்வசாதாரணமாகிவிட்டது. கிட்டத்தட்ட அனைவரும் தங்கள் அன்றாடத் தேவைகளுக்கு ஏடிஎம் கார்டுகளையே நம்பியிருக்கிறார்கள். இருப்பினும், பலர் கவனக்குறைவாக ஏடிஎம் பின்களை உருவாக்குகிறார்கள், அவை ஹேக்கர்கள் மற்றும் மோசடி செய்பவர்கள் எளிதில் புரிந்துகொள்ளக்கூடியவை. இந்த எளிய மற்றும் பொதுவான எண்களை உங்கள் பின்னாகப் பயன்படுத்தியிருந்தால், உங்கள் வங்கிக் கணக்கு காலியாக அதிக நேரம் எடுக்காது. ஏடிஎம் பின் நம்பர் என்பது […]
atm balance

You May Like