மத்திய அரசின் பிரசார் பாரதி (Prasar Bharati) நிறுவனத்தின் கீழ் செயல்படும் டிடி செய்தி (DD News) தொலைக்காட்சியில் தேசிய அளவில் 59 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழ் பிரிவுக்கே தனியாக 13 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஊடகத் துறையில் அரசு நிறுவனத்தில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
பணி விவரம் மற்றும் சம்பளம்:
* மூத்த நிருபர் பதவிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன; சம்பள வரம்பு ரூ.60,000 முதல் ரூ.80,000 வரை.
* செய்தி வழங்குபவர் உடன் செய்தியாளர் (Grade-2) பதவிக்கு 7 இடங்கள், ரூ.45,000 முதல் ரூ.60,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* அதேபோல் செய்தி வழங்குபவர் உடன் செய்தியாளர் (Grade-3) பதவிக்கு 10 இடங்கள் உள்ளன; இவர்களுக்கு மாதம் ரூ.35,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படும்.
* புல்லட் இன் எடிட்டராக 4 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை.
* ஒலிபரப்பு நிர்வாகி 4 பேர் தேவைப்படுகின்றனர்; இவர்களுக்கு ரூ.30,000 வழங்கப்படும்.
* வீடியோ போஸ்ட் ப்ரொடக்ஷன் உதவியாளர் 2 பேர் தேவைப்படுவர்; மாதம் ரூ.30,0*00 முதல் ரூ.40,000 வரை சம்பளம்.
* அசைன்மெண்ட் ஒருங்கிணைப்பாளர் 3 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன; சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை.
* கண்டண்ட் எக்ஸ்குடிவ் 8 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன; ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
* காப்பி எடிட்டர் 7 பேர் தேவைப்படுகின்றனர்; ரூ.30,000 முதல் ரூ.35,000 வரை சம்பளம்.
* காப்பி ரைட்டர் 1 இடம் உள்ளது; மாதம் ரூ.30,000 வழங்கப்படும்
* பாக்கிங் உதவியாளர் 6 இடங்கள் உள்ளன; ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை சம்பளம்.
* வீடியோகிராப்பர் 5 பேர் தேவைப்படுகின்றனர்; சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை என குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
- மூத்த நிருபர், ஒலிபரப்பு நிர்வாகி, வீடியோ போஸ்ட் ப்ரோடக்ஷன் உதவியாளர், அசண்மெண்ட் ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- செய்தி வழக்குபவர் உடன் செய்தியாளர் பதவிக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- புல்லட் இன் எடிட்டர் பதவிக்கு 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- கண்டண்ட் எக்ஸ்குடிவ், காப்பி எடிட்டர் ஆகிய பதவிகளுக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- பாக்கிங் உதவியாளர் பதவிக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- வீடியோகிராப்பர் பதவிக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
மூத்த நிருபர் பதவிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் இதழியலில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இதழியல் அல்லது மக்கள் தொடர்பியல் போன்ற துறையில் பட்டப்படிப்பு பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குறைந்தது 2 ஆண்டு அனுபவம் அவசியம்.
செய்தி வழக்குபவர் உடன் செய்தியாளர் பதவிக்கு இதழியல், தொடர்பியல், காட்சி தொடர்பியல், செய்தி வாசிப்பு அல்லது ரிப்போர்ட்டிங் துறையில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். 2 முதல் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
புல்லட் இன் எடிட்டர் பதவிக்கு இதழியலில் பட்டப்படிப்பு அல்லது பிஜி டிப்ளமோ முடித்தவர்களே தகுதி. 7 ஆண்டுகள் அனுபவம் தேவை. இதற்கு முன்னர் செய்தியாளராக பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ஒலிபரப்பு நிர்வாகி பதவிக்கு ரேடியோ மற்றும் டிவி துறையில் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். குறைந்தது 3 ஆண்டு அனுபவம் அவசியம்.
வீடியோ போஸ்ட் ப்ரோடக்ஷன் உதவியாளர் பதவிக்கு திரைப்படம் அல்லது வீடியோ எடிட்டிங் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 2 ஆண்டு அனுபவம் தேவை.
அசைன்மெண்ட் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு இதழியலில் பட்டப்படிப்பு அல்லது பிஜி டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 5 ஆண்டு அனுபவம் அவசியம்.
கண்டண்ட் எக்ஸ்குடிவ் பதவிக்கு இதழியலில் டிப்ளமோ மற்றும் சமூக ஊடகத்தில் குறைந்தது 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
காப்பி எடிட்டர் மற்றும் காப்பி ரைட்டர் பதவிகளுக்கு இதழியலில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ உடன் 3 ஆண்டு அனுபவம் அவசியம்.
பாக்கிங் உதவியாளர் பதவிக்கு இதழியலில் பட்டப்படிப்பும் டிப்ளமோவும் முடித்தவர்களாக இருக்க வேண்டும். குறைந்தது 1 ஆண்டு அனுபவம் அவசியம்.
வீடியோகிராப்பர் பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், வீடியோகிரப்பி அல்லது சினிமோகிராப்பி துறையில் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்தவராகவும் இருக்க வேண்டும். 5 ஆண்டு அனுபவம் அவசியம்.
ஊடகத் துறையில் திறமை மற்றும் அனுபவம் கொண்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விரைவில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது? இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://avedan.prasarbharati.org/ என்ற இணயதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
கடைசி தேதி: விண்ணப்பிக்க விரும்புவோர் அக்டோபர் 21-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.