வேலை இல்லாத இளைஞர்களுக்கு ரூ.3.75 லட்சம்‌ வரை மானியம் வழங்கும் சூப்பர் திட்டம்…! முழு விவரம்…

tn Govt subcidy 2025

தமிழக அரசின்‌ படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ UYEGP திட்டத்தின்‌ கீழ்‌ கடன் பெற விண்ணப்பிக்கலாம்.


தமிழக அரசின்‌ படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ UYEGP திட்டத்தின்‌ கீழ்‌ வியாபாரம்‌ சார்ந்த தொழில்கள்‌ துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகையும்‌ மானிய தொகையும்‌ உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தில்‌ அதிகபட்சமாக ரூ.5 லட்சம்‌ வரை வங்கியில்‌ கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம்‌ அதிகபட்சமாக ரூ.1.25 லட்சத்தை பெறலாம்‌ என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய அரசாணை படி அதிகபட்சமாக ரூ.15 லட்சம்‌ வரை வங்கியில்‌ கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம்‌ அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம்‌ வரை பெறலாம்‌.

ஏற்கனவே உள்ள UYEGP மற்றும்‌ NEED திட்டத்தில்‌ பொதுப்பிரிவு ஆண்களுக்கு சுய தொழில்‌ செய்வதற்கு அதிகபட்சமாக 35 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்‌. எஸ்‌.சி., எஸ்‌.டி., எம்‌.பி.சி., பி.சி, சிறுபான்மையினர்‌, பெண்கள்‌, முன்னாள்‌ ராணுவ வீரர்‌ ஆகியோர்‌ 45 வயது வரை கடன்‌ பெறலாம்‌ என அறிவிக்கப்பட்டிருந்தது. புதிய அரசாணை படி UYEGP மற்றும்‌ NEED திட்டத்தில்‌ பொதுப்பிரிவு ஆண்களுக்கு 45 வயது வரையிலும்‌, எஸ்‌.சி., எஸ்‌.டி, எம்‌.பி.சி., பி.சி., சிறுபான்மையினர்‌, பெண்கள்‌, முன்னாள்‌ ராணுவ வீரர்‌ ஆகியோர்க்கு 55 வயது வரையிலும்‌ வங்கியில்‌ விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Vignesh

Next Post

ஷாக்!. 40% பெண்கள் பாலியல் செயலிழப்பு (FSD) நோயால் பாதிப்பு!. 3 எச்சரிக்கை அறிகுறிகள் இதோ!

Sat Sep 20 , 2025
40% பெண்கள் பெண் பாலியல் செயலிழப்பு (FSD) female sexual dysfunction நோயால் பாதிக்கப்படுகின்றனர். உடலுறவு உங்களுக்கு வேதனையாகிவிட்டதா, அல்லது இனி அப்படி உணரவில்லையா, அல்லது ஒருவேளை உச்சக்கட்டத்தை அடைவது கடினமாகிவிட்டதா? அப்படியானால், அது பெண் பாலியல் செயலிழப்பு (FSD) ஆக இருக்கலாம். இந்த பாலியல் பிரச்சனை தோராயமாக 40% பெண்களைப் பாதிக்கிறது. FSD பெரும்பாலும் ஹார்மோன் மாற்றங்கள், மன ஆரோக்கியம், உறவு பிரச்சினைகள் அல்லது பிற உடல் காரணிகளால் […]
women sexual

You May Like