சூப்பரோ சூப்பர்..!! இனி ஆண்களுக்கு இணையாக பெண்களும் சம்பளம் வாங்கலாம்..!! Kerala அரசு அதிரடி..!!

ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சம ஊதியம் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், ”சமீப காலம் வரை பெண்களின் கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், இனி பணிகளிலும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். வேலைகள் பெண்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும். இதற்காக, பணியிடங்களில் பாலின தணிக்கை நடத்தப்பட்டு, சம ஊதியம் உறுதி செய்யப்படும்.

உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அனைத்து, மாநில பல்கலைக்கழகங்களிலும் மாணவியருக்கு மாதவிடாய் விடுமுறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் கேரளா ஒரு முன்மாதிரி மாநிலமாக திகழ்ந்துள்ளது. 1997இல் நாட்டிலேயே முதல் மாநிலமாக பெண்களுக்கு தனியாக பாலின பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதிக பெண்கள் உயர்கல்வி பயிலும் மாநிலத்தில் கேரள முதலிடத்தில் உள்ளது. இதேபோல், பெண்கள் அதிகம் பணிபுரியும் மாநிலங்கள் வரிசையிலும் முதலிடத்துக்கு வரவேண்டும்.

கேரளாவில், பாலின பட்ஜெட் இந்தாண்டு மொத்த பட்ஜெட்டில் 21.5 சதவீதமாக உள்ளது. 2017-18 முதல் ஆண்டுதோறும் பாலின பட்ஜெட் மாநில பட்ஜெட்டுடன் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. கேரளாவில் புதிதாக தொடங்கப்பட்ட தொழில் நிறுவனங்களில் 40 சதவீத தொழில்முனைவோர் பெண்களாவர். மேலும், புதிதாக துவங்கப்படும் தொழில் துறையில் ரூ.8,000 கோடி முதலீட்டில் ரூ.1,500 கோடி முதலீடு பெண் தொழில்முனைவோரிடமிருந்து பெறப்பட்டுள்ளது. சமூக முன்னேற்றமடைய பெண்களுக்கு நிதி சுதந்திரம் தேவை” என்று பேசினார்.

English Summary : Kerala will conduct gender audit, ensure equal pay for women: CM Pinarayi Vijayan

Read More : Corona தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகள்..!! இது உயிருக்கே ஆபத்தாம்..!! ஆய்வு முடிவில் அதிர்ச்சி..!!

Chella

Next Post

WPL: இன்று தொடங்குகிறது மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள்!… மும்பை - டெல்லி அணிகள் மோதல்!

Fri Feb 23 , 2024
மகளிர் பிரீமியர் லீக்கின் 2வது சீசன் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் மும்பை – டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்தியாவில் நடைபெற்று வரும் லீக் போட்டிகள் தொடக்கத்தில் ஆண்கள் விளையாடுவதற்கு மட்டும் நடத்தப்பட்ட லீக் போட்டி, தற்போது பெண்களுக்கும் நடத்தப்படுகின்றது. இதற்கான வரவேற்பு எதிர்பார்க்கப்பட்டதை விடவும் அதிகமாக இருந்ததால், இரண்டாவது சீசன் இந்த ஆண்டு நடத்தப்படுகின்றது. கடந்த ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்ட WPL லீக் தொடரானது, நடப்பாண்டுக்கான முதல் ஆட்டம் […]

You May Like