உடலையும், மனதையும் அழகாக வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்..!! இது ரொம்ப முக்கியம்..!!

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

உடற்பயிற்சி : தினமும் 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்தால், உடலும் மனதும் ஆரோக்கியமாக இருக்கும். ஜிம்மிற்கு சென்றுதான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பது இல்லை. நீச்சல், சைக்கிளிங், ஜூம்பா, கார்டியோஸ், யோகா போன்றவற்றில் உங்களுக்கு பிடித்ததை செய்யலாம்.

தூக்கம் : தினமும் 7-8 மணி நேர தூக்கம் மிக மிக அவசியம். சரியாக தூங்கவில்லை என்றால், எந்த விஷயத்திலும் கவனம் செலுத்த முடியாது. அன்றாட வாழ்வில் தெளிவான முடிவையும் எடுக்க முடியாது. தினமும் நன்றாக தூங்கி எழுந்துக்கொள்வதை உறுதி செய்யுங்கள்.

சமூகத்துடன் இணைந்து இருங்கள் : எப்போதும் தனியாக இருக்காமல், குடும்பம், நண்பர்கள், பக்கத்து வீட்டினர் என அனைவருடன் நல்லுறவை பாராட்டுங்கள். உங்களால் முடிந்த அளவுக்கு மற்றவர்களுக்கு உதவுங்கள். இப்படி செய்தால் மனதிற்கு ஒருவிதமான நிம்மதி கிடைக்கும்.

டயட் : கார்போஹைட்ரேட்ஸ், புரதம், வைட்டமின், மினரல்ஸ் என அனைத்து வகையான சத்துக்களை கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

கவனம் : எந்தவொரு வேலை செய்தாலும், முழுமனதுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும். வேறு எதையோ நினைத்துக் கொண்டு எதையோ செய்யக்கூடாது.

மருத்துவரின் உதவியை நாடுங்கள் : உங்களால் தாங்க முடியாத பிரச்சனைகள் இருந்தால் மருத்துவர் அல்லது மனநல நிபுணரின் உதவியை பெற்றுக்கொண்டு தீர்வு காணுங்கள்.

Read More : பெற்றோர்களே..!! உங்கள் குழந்தைக்கு இந்த ஆவணத்தை வாங்கிவிட்டீர்களா..? சீக்கிரம் எடுங்க..!!

Chella

Next Post

’இனி விடிய விடிய ஏசி ஓடினாலும் இதை மட்டும் பண்ணிடுங்க’..!! ’கரண்ட் பில் அதிகம் வராது’..!! மின்சார வாரியம் டிப்ஸ்..!!

Thu Apr 11 , 2024
கோடை வெயில் கொளுத்த தொடங்கியுள்ள நிலையில், பல வீடுகளில் அதிகமாக ஏசி பயன்படுத்துகின்றனர். இதற்காக மின்சார வாரியம் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. கோடை காலம் துவங்கிவிட்டதால், கடும் வெப்பமும், புழுக்கமும் அதிகரித்து வருகிறது. எனவே, வீடுகளில் AC, Air Cooler அதிகமாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில், ஏர் கூலருடன் ஒப்பிடும்போது AC-க்கு செலவு அதிகம். காரணம், அது அதிக மின்சாரத்தை உறிஞ்சுகிறது. எனவே கரண்ட் பில்லும் அதிகமாகவே வருகிறது. […]

You May Like