தவெகவுக்கு ஆதரவு..? அமைச்சரவையில் பங்கு..? காங்கிரஸ் தேசிய தலைமைக்கு அதிகாரம்..!

Vijay Rahul 2026

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.. ஆட்சியமைக்க 118 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.. எனவே அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை.. மேலும்  எனவே தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அடுத்தது தொங்கு சட்டசபை அமையும் என்று கூறப்படுகிறது.. 


எனவே, தவெகவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க மேலும் 12 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.. தற்போதைய சூழலில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 6 இடங்களும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் வீதம் 4 இடங்களும், தேமுதிகவுக்கு 1 இடமும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு 2 இடங்களும், விசிகவுக்கு 2 இடங்களும் கிடைத்துள்ளன.. இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவளிக்கும் என்று கூறப்படுகிறது..

இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்களுடன் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.. சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த இந்த ஆலோசனையில் இரண்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..

அதன்படி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரை தேர்வு செய்யும் அதிகாரம் காங்கிரஸ் தேசிய தலைமைக்கு வழங்கப்பட்டுள்ளது..

தவெகவுக்கு ஆதரவு வழங்கலாமா அல்லது திமுக கூட்டணியிலேயே தொடரலாமா என்பது குறித்து முடிவு செய்யவும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கவும் டெல்லி தலைமைக்கு அதிகாரம் வழங்கியும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது..

தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ் விஜய்க்கு ஆதரவளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.. குறிப்பாக காங்கிரஸ் தவெக உடன் கூட்டணி அமைத்து அமைச்சரவையில் இடம்பெற போகிறோமா அல்லது திமுக கூட்டணியில் தொடர வேண்டுமா என்பது காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும் என்று கூறப்படுகிறது..

RUPA

Next Post

உங்களிடம் போஸ்ட் ஆபீஸ் கணக்கு அல்லது திட்டம் ஏதேனும் உள்ளதா? புதிய விதிகள் வந்துவிட்டன..! பெரும் மாற்றங்கள்..!

Tue May 5 , 2026
தபால் அலுவலக சேமிப்புத் திட்டத்தில் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களின் முக்கிய நோக்கம், சிறு சேமிப்பாளர்களின் நிதிசார் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதும், வரி விதிப்பு முறையுடனான அவர்களின் தொடர்பை வலுப்படுத்துவதும் ஆகும். ரொக்க வைப்புத்தொகை, பணம் எடுத்தல், கணக்கு தொடங்குதல் மற்றும் கால வைப்பு முதலீடுகள் போன்ற பல பரிவர்த்தனைகளுக்கு, தற்போது ‘PAN’ (நிரந்தர கணக்கு எண்) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வருமான வரி விதிகள் 2026-இன் கீழ் வரும் விதிகள் […]
post office digital payment 2025 06 29 12 38 04 1

You May Like