டெல்லியில் சுற்றித்திரியும் அனைத்து தெரு நாய்களையும் எட்டு வாரங்களுக்குள் பிடித்து நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெரு நாய் கடி சம்பவங்களை தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவன் அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தெருநாய்களைப் பிடிக்க அதிகாரிகளுக்கு தடையாக இருந்தால், சம்பந்தப்பட்ட நபர் அல்லது அமைப்புக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது. நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் தலைமையிலான அமர்வு, 5,000 தெருநாய்களை தங்க வைக்கும் வசதியுடன் நாய் காப்பகங்கள் அமைக்கவும், போதுமான பணியாளர்கள் நியமித்து கருத்தடை, தடுப்பூசி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டது.
கைக்குழந்தைகள், சிறுவர் யாரும் வெறிநாய் கடிக்கு ஆளாகக் கூடாது; ரேபிஸ் நோய் பரவாமல் தடுப்பதே எங்கள் நோக்கம், என பெஞ்ச் தெரிவித்தது. மேலும், நாய் கடி சம்பவங்கள் குறித்து உடனடியாகப் புகாரளிக்க ஒரு வாரத்திற்குள் உதவி எண்ணை தொடங்கவும் உத்தரவிடப்பட்டது. ஜூலை 28 அன்று டெல்லியில் நாய் கடித்து ரேபிஸ் நோய் ஏற்பட்டதாக வந்த செய்தியை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது குறிப்பிடத்தக்கது.
Read more: இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை.. ரூ.1,40,000 சம்பளம்.. மிஸ் பண்ணிடாதீங்க..!!