கார்த்தியின் “வா வாத்தியார்” படம் மீதான தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு..!

va vatgu

நளன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் வா வாத்தியார். இந்த படத்தின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த படம் டிசம்பர்12-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் திவாலான தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர் தாஸ் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து ஞானவேல் ராஜா வாங்கிய கடனை செலுத்தாததால் இந்த படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.. ஞானவேல் ராஜா எப்போது கடனை செலுத்துவார் என்று பதிலளிக்கவும் உத்தரவிட்டது.


இந்த வழக்கு கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் “ ஞானவேல் ராஜாவுக்கு ஏற்கனவே நீதிமன்றம் பல முறை வாய்ப்பளித்துள்ளது.. எனவே மீண்டும் வாய்ப்பளிக்க தேவையில்லை. பணம் கொடுத்தவர் திரும்ப பெற நீண்டகாலம் காத்திருக்கிறார்.. ஞானவேல் ராஜா கடனை திருப்பி செலுத்த எந்த வித தீவிர முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

நீதிமன்றம் ஏற்கனவே போதுமான கால அவகாசம் அளித்துள்ளது. அதனை ஞானவேல் ராஜா தவறாக பயன்படுத்தி உள்ளார்.. எனவே ஞானவேல் ராஜா கடன் தொகையை முழுமையாக செலுத்தும் வரை படத்தை வெளியிடக் கூடாது. அனைத்து தளங்களிலும் படத்தை வெளியிட அனுமதி இல்லை..” என்று உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஸ்டுடியோ கிரீன் உச்ச நீதிமன்றத்தல் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து, உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என தெரிவித்துள்ளது. இதனால் படவெளியீடு இன்னும் தள்ளிப்போகும் வாய்ப்புகள் உருவாகி உள்ளது.

Read more: SBI வங்கியில் 996 காலிப்பணியிடங்கள்.. டிகிரி தகுதி போதும், தேர்வு கிடையாது..! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

English Summary

Supreme Court refuses to lift ban on Karthi’s film “Vaa Vaathiyaar”!

Next Post

ரூ.718 கோடி முதலீடு, 663 பேருக்கு வேலைவாய்ப்பு..! முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஷ்னைடர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Thu Dec 18 , 2025
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அவ்வப்போது முதலீட்டாளர் மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் சமீபத்தில் மதுரை முதலீட்டாளர் மாநாட்டில் 91 ஒப்பந்தங்கள், மற்றும் ஜெர்மனி, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் பல முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன, இதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளும் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளும் உருவாக உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் ரூ.718 கோடி முதலீட்டில், 663 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் […]
cm stalin

You May Like