NOTA-விற்கு அதிக வாக்குகள் பதிவானால் மறு தேர்தல்.!! தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்.!!

அதிகமான நோட்டா(NOTA) வாக்குகள் பதிவான இடங்களுக்கு மீண்டும் வாக்குப்பதிவு நடத்த கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அளித்திருக்கிறது.

எழுத்தாளர் மற்றும் பேச்சாளரான ஷிவ் கேரா தாக்கல் செய்த பொதுநல வழக்கு தொடர்பான விசாரணை தலைமை நீதிபதி தனஞ்சய சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இதுவும் தேர்தல் நடைமுறை பற்றியது. தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறது என்பதையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என நீதிபதி தலைமை நீதிபதி தனஞ்சய சந்திரசூட் தெரிவித்தார். மேலும் நீதிபதிகள் பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் பதிலைக் கோரினர்.

கேரா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், இந்த விவகாரம் ஒரு முக்கியமான பிரச்சினையை எழுப்புகிறது என்றும், பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட சூரத் நாடாளுமன்றத் தொகுதியின் சமீபத்திய உதாரணத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். சூரத் பாராளுமன்ற தொகுதியில் வேறு வேட்பாளர்கள் இல்லாததால் அனைத்து ஓட்டுகளும் ஒரு நபருக்கே சென்றிருக்கும் என மூத்த வழக்கறிஞர் சங்கரநாராயணன் தெரிவித்தார்.

நோட்டாவை கற்பனை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் ஒரு தொகுதியில் நோட்டாவிற்கு அதிக வாக்குகள் கிடைத்தால் அந்தத் தேர்தல் செல்லாது என அறிவித்து அந்தத் தொகுதிக்கு மறுவாக்குப் பதிவு நடத்தப்பட வேண்டும் என்ற வழிகாட்டுதல்களை உருவாக்குமாறும் நீதிமன்றத்திடம் இருந்து தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என பொதுநல வழக்கின் மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

2013 ஆம் ஆண்டு நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் என அனைத்து நிலைகளிலும் தேர்தல் செயல்பாட்டில் நோட்டா(NOTA) அறிமுகப்படுத்தப்பட்டது. நோட்டாவை தேசிய அளவில் “கற்பனை வேட்பாளராக” மாற்றுவதற்கு மனுதாரர் இரண்டு முறை தேர்தல் குழுவை அணுகி இருக்கிறார்.

வழக்கறிஞர் ஸ்வேதா மஜூம்தார் தாக்கல் செய்த மனுவில், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில தேர்தல் குழுக்கள் டெல்லி, புதுச்சேரி யூனியன் பிரதேசங்கள் உள்ளாட்சி தேர்தலில் நோட்டாவை கற்பனையான வேட்பாளராக மாற்றியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த 4 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உருவாக்கப்பட்ட விதிகளின்படி “ஏதேனும் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தனித்தனியாக நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்றால், போட்டியிடும் வேட்பாளர்கள் யாரும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட மாட்டார்கள். கட்டாய மறுவாக்கெடுப்பு நடத்தப்படும்

நோட்டா பெரும்பான்மை பெற்றால், அந்தத் தொகுதியில் நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது என அறிவிக்கப்பட்டு, அந்தத் தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்படும் வகையில், தேர்தல் ஆணையம் விதிகளை உருவாக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

மேலும், நோட்டாவை கற்பனையான வேட்பாளராகப் விளம்பரம் செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடம் மனுதாரர் கோரிக்கை வைத்திருக்கிறார். நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெறும் வேட்பாளர்கள் ஐந்தாண்டு காலத்திற்கு அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறார்.

Read More: PM Modi | “மக்களின் சொத்துக்களை அபகரிக்கவே காங்கிரஸ் ஆட்சிக்கு வர முயற்சிக்கிறது…” பிரதமர் மோடி குற்றச்சாட்டு.!!

Next Post

நடுரோட்டில் பைக்கில் டைட்டானிக் போஸ் கொடுத்த 'ஸ்பைடர்மேன்' 'ஸ்பைடர் வுமன்'…! தட்டி தூக்கிய டெல்லி போலீஸ்..! என்ன நடந்தது…

Fri Apr 26 , 2024
ரீல்ஸ் மோகம் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரீலிஸ் எடுப்பதற்காக புதுபுது முயற்சிகள் எடுக்கும் நபர்கள் இறுதியில் வில்லங்கத்தில் சிக்கிக்கொள்கின்றனர். அதுபோல் தான் தற்போது டெல்லியில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. தென்மேற்கு டெல்லியின் துவாரகாவில் சூப்பர் ஹீரோக்கள் ஸ்பைடர்மேன் மற்றும் ஸ்பைடர் வுமன் போல உடையணிந்து மோட்டார் சைக்கிளில் டைட்டானிக் போஸ் கொடுத்து வித்தை காட்டி, ரீல்ஸ் எடுத்தது ஒரு ஜோடி. ரீல்ஸ் மூலம் பிரபலமான டெல்லியை சேர்ந்த ஆதித்யா […]

You May Like