“மக்களுக்கு சர்பிரைஸ், மக்கள் விரோதிகளுக்கு ஷாக்.. இதுதான் ஸ்டாலின் ஸ்டைல்..” முதல்வர் பெருமிதம்..!

cm stalin n 2

திருப்பத்தூர் மண்டலவாடி திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.. இந்த மாநாட்டிற்கு திறந்தவெளி வாகனத்தில் வந்த முதல்வர் ஸ்டாலினை கண்டு தொண்டர்கள் உற்சாகமாக முழக்கமிட்டனர்.. கருப்பு, சிவப்பு, துனை சுழற்றியபடியே திமுக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்..


இந்த மாநாட்டில் வடக்கு மண்டலத்தை செர்ந்த சுமார் 1.5 லட்சம் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்றனர்..

இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் “ உங்களை போன்ற நிர்வாகிகளிடம் பொறுப்பை கொடுத்தால் போதும் மீண்டும் உதயசூரியன் ஆட்சி உறுதி.. சதிகளை முறியடித்து சரித்தர வெற்றிகளை திமுகபெற்று வருகிறது.. எதிரிகளை கலங்கடிக்க வைக்கும் வகையில் திமுக வெற்றி பெற்றது.. அடுத்து வரப்போதும் திமுக ஆட்சி தான்.. ஒவ்வொரு பூத்திலும் 350 வாக்குகளை இலக்காக கொண்டாலே 2.5 கோடி வாக்குகளை பெற்றுவிடலாம்..

ஒவ்வொரு வாக்காளர்களையும் திமுகவினர் குறைந்தபட்சம் 5 முறையாவது சந்திக்க வேண்டும்.. அரசின் சாதனைகளை சொல்லி வாக்காளர்களிடம் பணிவாக, அன்பாக, நட்பாக வாக்கு சேகரிக்க வேண்டும்.. ஒவ்வொரு வாக்காளரையும் வாக்குப்பதிவு மையத்திற்கு அழைத்து வருவது உங்கள் கடமை.. வாக்குப்பதிவு முடிந்தும் வாக்குப்பதிவு பெட்டிகளை சீல் வைத்து எடுத்து செல்லும் வரை கவனமாக இருக்க வேண்டும்..

வீடு வீடாக போய் பிரச்சாரம் செய்ய வேண்டும்.. அவர்களிடம் நமது சாதனைகளை விளக்கி சொல்லுங்கள்.. வாக்காளர்களிடம் நட்பாக பேசுங்கள்.. தமிழ்நாட்டில் நமது திராவிட மாடல் ஆட்சி வந்தால் தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடரும் என்று புரியவையுங்கள்.

இதற்காக தேவைப்படும் தகவல்கள் அடங்கிய புத்தகம் உங்களுக்கு வழங்கி இருக்கிறோம்.. அதை முழுதாக படித்த அதில் உள்ள திட்டங்களை மனப்பாடம் செய்யுங்கள்.. அடுத்த 2 மாதம் எந்த பக்கம் திரும்பினாலும் அங்கு திமுக பிராண்ட தான் தெரியவேண்டும்.. தெருமுனை பிரச்சாரங்கள், திண்ணை பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும்..

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம், விடியல் பயணம் திட்டம், புதுமைப் பெண் திட்டம், நலன் காக்கும் ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின், கலைஞர் வீடு திட்டம், தோழி விடுதிகள், முதலமைச்சர் கோப்பை, முதலமைச்சரின் தாயுமானவன் திட்டம், உங்க கனவை சொல்லுங்க திட்டம். அவ்வளவு திட்டங்கள்.. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.  மக்கள் நலத்திட்டங்கள் எந்த தடையும் இல்லாமல் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று அட்வான்ஸாக செயல்படும் காரணத்தினால் தான் இப்போது Talk of the Nation.. நேற்று காலை 1 கோடி 30 லட்சம் மகளிருக்கு ஒரு சேர புன்னகையை கொண்டு வந்தோம்.. அவர்கள் முதலில் கேட்டது மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் ரூ.5,000 வந்தது என்ற மெசேஜ் டோன் தான்..

தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமை தொகை திட்டத்தை தடுக்க நினைத்த சதியை முறியடித்துள்ளோம்.. பாஜகவை சேர்ந்த ஒருவரை வைத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, மக்கள் நல திட்டங்களை தடுக்க வேண்டும் என்று திட்டம் போட்டனர்.. தமிழக மகளிருக்கு நான் கொடுத்த உறுதி மொழி தான் மகளிர் உரிமைத் தொகை.. அதற்கு தடை போட நான் விட்டுவிடுவேனே.. மக்களுக்கு சர்பிரைஸ் கொடுத்து, மக்கள் விரோதிகளுக்கு ஷாக் கொடுத்தோம்.. இதுதான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய ஸ்டைல்..” என்று தெரிவித்தார்.

RUPA

Next Post

“ஸ்டாப் என சொல்லும் வரைக்கும் நான்-ஸ்டாப்பாக பல்டி அடிப்பார் இபிஎஸ்..” பங்கம் செய்த ஸ்டாலின்..!

Sat Feb 14 , 2026
திருப்பத்தூர் மண்டலவாடி திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.. இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின் “ பாஜகவின் கிளை செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.. பாஜகவின் கிளை கழகம் தான் அதிமுக.. தவழ்ந்து தவழ்ந்து பதவியை பெற்ற, இபிஎஸ் பின்னர் சசிகலாவின் காலை வாரிவிட்டார்.. பொல்லாத பழனிசாமி ஆட்சிக்கு சாட்சியாக பொள்ளாசி சம்பவம் உள்ளது.. அதிமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என போராடியவர்கள் மீது […]
EPS MK Stalin 2025

You May Like