உடலில் உயர் கொலஸ்ட்ரால் (High Cholesterol) இருக்கிறது என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியாமல் போய் விடும். இது சைலன்ட் கில்லர் என அழைக்கப்படும் காரணமும் அதுவே. ஆனால் சில நேரங்களில், குறிப்பாக நடக்கும்போது அல்லது உடற்பயிற்சி செய்யும்போது காலில் சில அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கலாம். அதுகுறித்து பார்க்கலாம்.
கால்களில் வலி: மாடிப்படி ஏறும்போது கால்களில் வலி உண்டாகிறது. இந்த வலி கெண்டைக்கால், தொடை அல்லது பிட்டத்தில் ஏற்படலாம். ஓய்வெடுத்தால் இந்த வலி குறையும். சிலருக்கு வலி இருந்துகொண்டே இருக்கும். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகி கால்களை மட்டும் பரிசோதிக்காமல் கொலஸ்ட்ரால் அளவை பரிசோதிப்பது நல்லது. கொலஸ்ட்ரால் அதிகமாகும் போது அது கால்களுக்கு செல்லும் ரத்த குழாய்களை அடைக்கும்போது, தசைகளுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் சத்துக்கள் கிடைப்பதில்லை. இதனால் தசை பலவீனம் அடைகிறது.
கால்களில் குளிர்ச்சி: நடக்கும்போது ஒரு கால் மட்டும் அதிகமாகக் குளிர்ந்தால், அது இரத்த ஓட்டப் பிரச்சனையால் இருக்கலாம். அடைபட்ட இரத்த குழாய்களால் ஆக்சிஜன் குறைந்து கால் வெளிறிப் போகலாம். சில நேரங்களில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் கால் வெளிறி அல்லது நீல நிறமாக மாறலாம். தொடர்ந்து கால்கள் குளிர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
உடற்பயிற்சி செய்யும் போது அசெளகரியம்: உடற்பயிற்சி செய்யும் போது கால்கள், குறிப்பாக விரல்களில் கூச்சம் அல்லது உணர்வின்மை ஏற்பட்டால், அதைக் சாதாரணமாகக் கருதக்கூடாது. இது உங்கள் உடலில் இரத்த ஓட்டம் குறைந்திருப்பதற்கான எச்சரிக்கை ஆக இருக்கலாம். நம்முடைய நரம்புகள் சரியாக செயல்பட போதிய ஆக்சிஜன் தேவை. ஆக்சிஜன் போதுமான அளவில் கிடைக்கவில்லை என்றால், நரம்புகள் பாதிக்கப்படுகிறன.
சில நேரம் மட்டும் இப்படி ஏற்பட்டால் பிரச்சனை இல்லை. ஆனால் அடிக்கடி இந்த உணர்வுகள் தொடர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி, கொலஸ்ட்ரால் அளவையும், நரம்பு செயல்பாடுகளையும் பரிசோதிக்க வேண்டியது அவசியம்.
தோல் நிறம் மாறுதல்: ரத்த ஓட்டம் சரியில்லாமல் போவதால் தோல் வெளிறிப் போகலாம் அல்லது நீல நிறமாக மாறலாம். ஆக்சிஜன் எடுத்து செல்லும் ரத்தம் சருமத்திற்குப் போக முடியாமல் போனால் இந்த நிறமாற்றம் ஏற்படும். தீவிரமான நிலைகளில், திசுக்கள் நீலமாக மாறும்.
உயர் கொலஸ்ட்ரால் யாருக்கு வர வாய்ப்பு அதிகம்?
* பரம்பரையாக உடலில் கொலஸ்ட்ரால் இருப்பவர்களுக்கு வரலாம்.
* கொழுப்பு நிறைந்த உணவுகள் எடுத்துகொள்பவர்களுக்கு வரலாம்.
* புகைப்பிடித்தல் இரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது. இதனால் அவை கொழுப்பு படிவுகளை சேகரிக்க வாய்ப்புள்ளது.
* தைராய்டு பிரச்சனை பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு கொலஸ்ட்ரால் அதிகமாக வாய்ப்புண்டு.
* உடற்பயிற்சி இல்லாமல் உடலுக்கு உழைப்பு கொடுக்காமல் இருப்பவர்களுக்கு வரலாம்.
* உடல் எடை அதிகமா இருப்பவர்கள் உயர் கொலஸ்ட்ரால் அபாயத்தில் இருப்பவர்களே.
* நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல கொழுப்பு அடர்த்தி குறைந்து குறைந்த கொழுப்பு அளவு உயர்த்துகிறது.
Read more: தவெக 2-வது மாநாடு பூமி பூஜை: ஒரே மேடையில் விநாயகர், மாதா, மெக்கா படங்கள்..!!