2025 ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் ஆகிய அணிகளுடன் இணைந்து இந்தியா குரூப் ஏ-வில் இடம் பெற்றுள்ளது. பிராந்தியப் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் அறிவித்துள்ளார். முதல் முறையாக டி20 போட்டியில் விளையாடும் வீரர்களின் பட்டியல் விவரங்களை அறிந்துகொள்ளுங்கள்.
ஆசிய கோப்பை ‘டி-20’ கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் (செப். 9-28) நடக்க உள்ளது. டி20 ஆசியக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் அடங்கிய பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அசத்திய சுப்மன் கில் (754 ரன்), அக்சர் படேலுக்குப் பதில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடைசியாக 2024, ஜூலை 30ல் இலங்கைக்கு (பல்லேகெலே) எதிரான போட்டியில் பங்கேற்றார்.
‘டாப் ஆர்டரில்’ சஞ்சு சாம்சன் (கீப்பர்-பேட்டர்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ரிங்கு சிங் இடம் பிடித்தனர். ‘ஆல்-ரவுண்டர்களாக’ ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ஷிவம் துபே உள்ளதால், வாஷிங்டன் சுந்தருக்கு இடம் கிடைக்கவில்லை.
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கான ஒத்திகையாக ஆசியக் கோப்பை செயல்படுகிறது. செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கும் இந்த பிராந்திய போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த ஆசிய அணிகள் அனைத்தும் தயாராகிக் கொண்டிருக்கின்றன. முதல் முறையாக டி20 ஆசிய கோப்பை அணியில் இடம்பிடித்த பல வீரர்கள், போட்டியில் விளையாடத் தயாராக உள்ளனர். 15 பேர் கொண்ட முக்கிய அணியில் 10 பேர் இதற்கு முன் இந்த பிராந்தியத் தொடரின் T20 வடிவத்தில் விளையாடாதவர்கள் ஆவார்கள். துணை கேப்டன் ஷுப்மன் கில்லும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
கில்லைத் தவிர, இந்த போட்டியின் T20 வடிவில் முதல் முறையாக இடம் பெற்றுள்ளவர்கள்: அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, சிவம் டுபே, ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் ராணா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் ஆவர்.
தற்போதைய அணியில், மொத்தம் ஐந்து வீரர்கள் மட்டுமே இந்த போட்டியின் T20 வடிவில் விளையாடிய அனுபவம் பெற்றுள்ளனர். 2022 ஆசியக் கோப்பை T20 தொடரில் இந்திய அணியில் விளையாடியவர்கள் — தற்போதைய T20I கேப்டன் சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல், ஹர்திக் பாண்ட்யா மற்றும் அர்ஷ்தீப் சிங். குறிப்பாக, ஜஸ்ப்ரீத் பும்ரா 2016 T20 ஆசியக் கோப்பை தொடரில் இடம்பெற்றிருந்தார்.
ஆசியக் கோப்பை 2025 இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில் (துணைக் கேப்டன்), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, சிவம் டுபே, அக்சர் படேல், ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்ப்ரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங்.
ஆசிய கோப்பைக்கான காத்திருப்பு வீரர்கள்: பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், துருவ் ஜூரல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் ஆவர்.