மேற்கு ஈரானில் உள்ள சனந்தாஜ் மற்றும் ஹமேடான் மாவட்டங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில், சனிக்கிழமை நிகழ்ந்த விபத்து காரணமாக எரிபொருள் டேங்கர் லாரி ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர், மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. டேங்கர் லாரி வெடித்ததில் ஏற்பட்ட தீ, அருகிலிருந்த பல வாகனங்களுக்கும் பரவி சேதத்தை ஏற்படுத்தியது. காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சனந்தாஜ் நகரில் […]