டெல்லியில் சிறுமிகளின் பாதுகாப்பு தொடர்பான சம்பவங்கள் அடுத்தடுத்து வெளிச்சத்துக்கு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் பல்வேறு பகுதிகளில் சிறுமிகளை குறிவைத்து பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன. இதனால் குழந்தைகளின் பாதுகாப்பு, குறிப்பாக சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகமாகும் நபர்களிடம் அவர்கள் பழகும் விதம் குறித்து பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. செப்டம்பர் 23ஆம் தேதி வடக்கு டெல்லியின் வாசிராபாத் பகுதியில் 13 வயது […]