ஆமத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் சென்னை மாவட்ட பெண்கள் அணி ஆதிக்கம் செலுத்தி, 21 தங்கப் பதக்கங்களுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. திருவள்ளூர் மாவட்ட அணி 11 தங்கப் பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்தைப் பிடித்தது. விருதுநகர் மாவட்டம் ஆமத்தூரில் உள்ள ஏஏஏ பொறியியல் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் 42-வது மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த […]