லடாக்கின் லே பகுதியில் வியாழக்கிழமை அன்று ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த ஒன்றிய பிரதேசத்தில் நான்கு மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால், அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. தேசிய நில அதிர்வு மையத்தின் தகவல்படி, இந்த இரண்டாவது நிலநடுக்கம் காலை 9.54 மணியளவில் ஏற்பட்டது. இது வடக்கே 36.765 அட்சரேகையிலும், […]

