திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதற்கு பதிலடியாக அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பலர் இரவோடு இரவாக திமுகவில் இணைந்தனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அனைத்து கட்சிகளும் களப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் தொகுதி பேரத்தை தொடங்கிய நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி தான் நிலைக்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின், கட்சியிலும் […]

திருப்பூர் மாவட்டம் குண்டடம் மேற்கு ஒன்றிய அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக இருந்த செல்வானந்தம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக நிர்வாகிகளின் மிரட்டலே எனது இந்த முடிவுக்கு காரணம் என வாட்ஸ் அப்பில் அளித்த மரண வாக்குமூலம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்வானந்தம், கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்காச்சோளம் வியாபாரம் செய்து வந்தார். வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடன்களை தாமதமாகச் […]