டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் 3 விமானங்கள், பலத்த காற்று மற்றும் கனமழையால் தரைப்பகுதி சேவை உபகரணங்கள் (ground support equipment) அவற்றின் மீது மோதியதில் சேதமடைந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். சனிக்கிழமை இரவு விமான நிலையத்தில் திடீரென மோசமான வானிலை நிலவியபோது இந்தச் சம்பவம் ‘டெர்மினல் 2’ பகுதியில் நிகழ்ந்தது. டெல்லி சர்வதேச விமான நிலைய நிறுவனம் (DIAL) […]