தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். […]
Alert
தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 17-ம் தேதி தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு […]
தமிழகத்தில் இன்று முதல் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும். இன்று காலை திருப்பத்தூர், தருமபுரியில் 17 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று மற்றும், நாளை தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு […]
‘டிட்வா’ புயலால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், 5 கிமீ வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சற்று நேரத்தில் தமிழக – புதுச்சேரி கடலோர பகுதியில் இருந்து 25 – 50 கிமீ தொலைவில் புயல் மையம் கொள்ளும் என தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து இன்று மாலை புயல் வலுவிழக்கும். மேலும், காலை 7 மணி வரை சென்னை, நாகை […]
அதி கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இலங்கை பகுதியில் இருந்து வடமேற்காக நகர்ந்து வரும் ‘டித்வா’ புயல் நாளை அதிகாலை வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும். இதன் காரணமாக, டெல்டா மற்றும் அதை ஒட்டிய கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 90 […]
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லக் […]
மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகரும் மோந்தா புயல். “வங்கக்கடலில் உருவான மோந்தா புயல், சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கு திசையில் 600 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் தொடர்ந்து நகர வாய்ப்பு உள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 90-100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. […]
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காஞ்சிபுரம், மதுரை, சேலம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ; தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று மற்றும் நாளை பெரும்பாலான இடங்களிலும், […]
திண்டுக்கல், தருமபுரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: தெற்கு ஒடிசா– வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. […]
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் பதார் தஷோதி பகுதியில் இன்று திடீர் மேக வெடிப்பு ஏற்பட்டது.. இதனால் கனமழை கொட்டி தீர்த்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.. மேலும் இந்த வெள்ளத்தில் ஒரு சமூக சமையலறை கொட்டகை அடித்துச் செல்லப்பட்டது… இதில் 10 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.. ஜம்மு & காஷ்மீரின் பல பகுதிகளில் அடுத்த 4–6 மணி நேரத்தில் மிதமான முதல் கனமழை பெய்யும் […]

