பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் சார்பில், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் படித்தவர்களுக்கான அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நாளை நடைபெறவுள்ளது. இது குறித்து பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் 15 வயதுக்கும் மேற்பட்ட முற்றிலும் எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கிடும் வகையில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. […]

பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் அல்லது டேப் வழங்குவது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டம் தொடங்கப்பட்டது.. அதன்படி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்பட்டு வந்தது. பள்ளியில் லேப்டாப் கிடைக்காத பட்சத்தில் 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்ந்த முதல் ஆண்டில் வழங்கப்பட்டு […]

சென்னையில் சர்வதேச புத்தகக் கண்காட்சி விரைவில் நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது சர்வதேச புத்தக கண்காட்சி எப்போது நடைபெறும் என அறிவித்துள்ளார். அதன் படி சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி ஜனவரி மாதம் 16, 17, 18 ஆகிய மூன்று நாட்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். மேலும் இந்த கண்காட்சியில் 40 […]