பாமக எம்எல்ஏ அருள் ஆதரவாளர்கள் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக அன்புமணி ஆதரவு பாமக நிர்வாகிகள் 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சேலம் அருகே வாழப்பாடி வடுகநத்தம்பட்டியைச் சேர்ந்த ராமதாஸ் ஆதரவாளர் சத்யராஜின் தந்தை தர்மராஜ் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு, பாமக எம்எல்ஏ அருள் மற்றும் ஆதரவாளர்கள் காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில் காரை வழிமறித்த அன்புமணி ஆதரவாளர்கள் கும்பல், அருள் எம்எல்ஏ ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியது. […]

கனிமக் கொள்ளையர்களும், அவர்களுக்கு துணையாக இருக்கும் காட்பாதர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். அதற்கான நடவடிக்கைகளை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து மேற்கொள்ளும் என அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் கனிமவளக் கொள்ளையால் மக்களுக்கும் உழவர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிவதற்காக நெல்லையில் இன்று நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பி.யு.சி.எல் எனப்படும் மக்கள் சிவில் உரிமைகள் ஒன்றியத்தின் தேசிய […]

தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதை முன்கூட்டியே தெரிவிக்க முடியாது. எனினும் விரைவில் அறிவிப்பேன் என அன்புமணி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி; மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றாமல் பெயர் மட்டும் வைத்து, திமுக விளம்பர ஆட்சி நடத்துகிறது. நல்ல திட்டங்களை செயல்படுத்த முதல்வருக்குத் தெரியவில்லை.திமுக ஆட்சியில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டது. கடந்த தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் பாதியளவு கூட நிறைவேற்றவில்லை. […]

பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக, தனது மகள் ஸ்ரீகாந்தியை ராமதாஸ் அறிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் பென்னாகரம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ தலைமை வகித்தார். கூட்டத்தில் பேசிய ராமதாஸ்: கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தருமபுரி மண்ணில் 4 பேருடன் தொடங்கப்பட்ட பாமக இன்று மாநிலம் முழுவதும் வளர்ந்து நிற்கிறது. இந்தக் […]

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுகவும் பாமகவும் அங்கம் வகித்தன. ஆனால், 2024 மக்களவைத் தேர்தலின்போது பாஜக கூட்டணியைவிட்டு அதிமுக வெளியேறி விட்டது. அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்பினார். ஆனால், தலைவர் அன்புமணியோ பாஜக கூட்டணியை விரும்பினார். […]

விவசாயிகள் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; காவிரி பாசன மாவட்டங்களில் அரும்பாடுபட்டு சாகுபடி செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்படாதது குறித்து உழவர்கள் கதறி அழுது முறையிட்டாலும் கூட, கொள்முதலில் இன்று வரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கொள்முதல் நிலையங்களுக்கு முன்பாக மழையில் நனைந்த நெல்லுடன் உழவர்கள் தவம் […]

கல்வி உரிமைச் சட்டத்தின்படியான மாணவர் சேர்க்கையை புதிதாக நடத்தி, தகுதியுடைய அனைவரும் பயனடைவதை  தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்ப்பதற்கான தமிழக அரசு விடுத்த அறிவிக்கை படுதோல்வி அடைந்துள்ளது. தனியார் உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில்  இந்தத் திட்டத்தின்படி  சேர்க்கப்பட வேண்டிய இடங்களில் பாதியளவுக்கும் […]

தமிழக சட்டப்பேரவை மரபுகளை பேரவைத் தலைவர் மதிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்; பாமகவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதற்காக சேலம் மேற்கு எம்எல்ஏ இரா.அருள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக புதிய கொறடாவாக மயிலம் எம்எல்ஏ தேர்ந்தெடுக்கப்பட்டு 108 நாட்கள் ஆகின்றன. அதேபோல், பேரவைக் குழுத் தலைவராக ஜி.கே.மணி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன், துணைத் தலைவராக மேட்டூர் […]

சிறுநீரகத் திருட்டு வழக்கின் விசாரணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுகவினர் சம்பந்தப்பட்டு  இருப்பதால் காப்பாற்ற முயல்வதா..? என அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டையே  அதிர வைத்த நாமக்கல் மாவட்ட சிறுநீரகத் திருட்டு குறித்து  தென்மண்டலக் காவல்துறை தலைமையில் விசாரணை நடத்த  மதுரை உயர்நீதிமன்றக் கிளை  பிறப்பித்த  ஆணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. […]

பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இருவருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பாமக நிர்வாகிகள் சார்பில் பல சமசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. ஆனால் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.. ஆனால், என் மூச்சிருக்கும் வரை நான் தான் தலைவர் என்று திட்டவட்டமாக ராமதாஸ் கூறி வருகிறார்.. மேலும் அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை […]