பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இருவருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பாமக நிர்வாகிகள் சார்பில் பல சமசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. ஆனால் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.. ஆனால், என் மூச்சிருக்கும் வரை நான் தான் தலைவர் என்று திட்டவட்டமாக ராமதாஸ் கூறி வருகிறார்.. மேலும் அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை […]

தூய்மைப் பணியாளர்களின் மாத ஊதியத்தில் மோசடி செய்வதை மன்னிக்க முடியாது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட ராயபுரம், திருவிக நகர் மண்டலங்களில் தூய்மைப் பணி செய்வதற்காக மாதம் ரூ.23,000 ஊதியம் தருவதாக வாக்குறுதி அளித்து, தூய்மைப் பணியாளர்களை மாநகராட்சி அதிகாரிகளும், திமுக மாநாகராட்சி மன்ற உறுப்பினர்களும் அழைத்துச் சென்று தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய வைத்த நிலையில், […]

உங்களுடன் ஸ்டாலின்’ ஊரை ஏமாற்றும் திட்டம் என்பது உறுதியானது என பாமக தலைவர் அன்புமணி விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் வீசப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மக்கள் அரசை நம்பி அளித்த கோரிக்கை மனுக்களுக்கு திமுக அரசு எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறது என்பதற்கு […]

பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சி தலைவர் அன்புமணி இடையே மோதல் போக்கு உச்சத்தை எட்டி உள்ளது. இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர்.. கட்சி நிர்வாகிகளை நீக்கியும், நியமித்தும் இருவரும் மாறி மாறி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.. இந்த நிலையில் அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் இன்று பாமகவின் பொதுக்குழு நடைபெற்றது.. ராமதாஸ் இல்லாமல் முதல் முறையாக நடக்கும் கூட்டம் இதுவாகும்.. பொதுக்குழு கூட்ட மேடையில் அன்புமணி உட்பட 40 பேருக்கு இருக்கைகள் […]

பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது, பாமக நிர்வாகக் குழுக் கூட்டம் தைலாபுரத்தில் கடந்த மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டார். ராமதாஸின் லெட்டர் பேடில் இருந்தும் அன்புமணியின் பெயர் நீக்கப்பட்டது. இதையடுத்து திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் மாநில செயற்குழு கூட்டம் கடந்த மாதம் 8-ம் தேதி நடைபெற்றது. இதில், அன்புமணியை விமர்சித்து பலரும் […]

தமிழகம் முழுவதும் 100 நாட்களுக்கு தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுதொடர்பாக பாமக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்; தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள்விரோத, சமூகநீதிக்கு எதிரான முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை அகற்ற வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10 வகையான உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்குடன் பாமக தலைவர் அன்புமணி வரும் 25-ம் […]

காமராசரின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் பேசியதற்கு திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக செயல்தலைவர் அன்புமணி ராமதாஸ் காமராஜர் குறித்து திருச்சி சிவா பேசிய சர்ச்சை கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழ்நாட்டின் தன்னிகரற்ற தலைவராக போற்றப்பட்டும்  பெருந்தலைவர் காமராசர் அவர்களின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் திமுக  துணைப் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான  திருச்சி […]