2025 ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி ஒன்பதாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், சாஹிப்சாதா ஃபர்ஹான் 57 ரன்களும், ஃபகர் ஜமான் 46 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தை அளித்தது. இருப்பினும், பாகிஸ்தானின் மிடில் ஆர்டர் முற்றிலும் சரிந்து, […]

ஆசிய கோப்பையின் சூப்பர் ஃபோர் சுற்றின் கடைசி போட்டியில் சூப்பர் ஓவரில் இந்தியா இலங்கையை வீழ்த்தியது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா, முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். பதிலுக்கு இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் எடுத்தது, இது இந்த ஆசிய கோப்பை 2025 இன் அதிகபட்ச […]

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில், கட்டாயம் வெல்ல வேண்டிய போட்டியில் பாகிஸ்தான் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த வெற்றியின் மூலம், ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறும் நம்பிக்கையை பாகிஸ்தான் தக்க வைத்துக் கொண்டது. 2025 ஆசியக்கோப்பை தொடரானது முக்கியமான கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. ஒரு தோல்வி கூட அடையாமல் ஒருபக்கம் இந்திய அணி ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், தோல்விக்கு பிறகு வெற்றிபெற்றே ஆகவேண்டிய வாழ்வா சாவா […]

ஆசிய கோப்பை ‘சூப்பர்-4’ போட்டியில் கடைசி ஓவரில் அசத்திய வங்கதேச அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி ‘திரில்’ வெற்றி பெற்றது. ஐக்கிய அரபு எமிரேட்சில், ஆசிய கோப்பை (‘டி-20’) 17வது சீசன் நடக்கிறது. துபாயில் நடந்த முதல் ‘சூப்பர்-4’ போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ இலங்கை, வங்கதேசம் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. இலங்கை அணிக்கு பதும் நிசங்கா (22), குசால் […]

ஆசியக் கோப்பை தொடங்க இன்னும் 16 நாட்களே இருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஜெர்சி ஸ்பான்சராக இருந்த Dream11 நிறுவனம், தனது ஒப்பந்தத்திலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாற்றம், கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் ‘ஆன்லைன் கேமிங்கை ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் மசோதா’ (Promotion and Regulation of Online Gaming Bill) நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டது. அந்த மசோதா ஆன்லைன் ஃபாண்டஸி ஸ்போர்ட்ஸ் […]