மத்திய பாஜக அமைப்பு இணை பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் தமிழக பாஜகவின் மாநில மையக்குழு நிர்வாகிகள் கூட்டம் இன்று மதியம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ள உள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில், கடந்த வியாழக்கிழமை தமிழக பாஜகவின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. […]

ரூ. 15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் மோடி பேசியதற்கான ஆதாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட வேண்டும். இல்லையெனில் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; ஜூன் 9-ம் தேதி திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தால் சிலருக்கு எரிச்சல், ஆத்திரம், […]

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரம் கேட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில்; மது இல்லாத தமிழகம் என்பது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கனவு மட்டுமல்ல. தமிழக பொது மக்களின் விருப்பமும் கூட. அதனை நிறைவேற்றிட, தமிழக பாரதிய ஜனதா கட்சியானது தகுந்த ஆலோசனைகளையும், கருத்துகளையும் வகுத்துள்ளது. இதுகுறித்த வெள்ளை அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதாக ஏற்கெனவே அறிவித்திருந்தேன். இதுதொடர்பாக, […]

தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார். அவதூறு வழக்கில் தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். காவல் ஆணையர் அலுவலகம் முன்பு பாஜகவினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பாஜகவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் ‌‌‌. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை மாநில உடற்கல்வி முதன்மை ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சமிபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை; டெல்லியில்‌ நடைபெற இருக்கும்‌ பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டிகளில்‌ கலந்துகொள்ள தமிழ்நாடு சார்பாக அணியை தேர்வு செய்யாமல்‌, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மாணவர்களை புறக்கணித்தது குறித்து, கேள்வி எழுப்பியிருந்தார். தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் மாணவர்கள் கலந்து கொள்வதற்குரிய தகவலை சரியாக தெரிவிக்காத தமிழ்நாடு முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணணை பள்ளிக்கல்வித்துறை […]

மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆர்.எஸ்.பாரதிக்கு பதில் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். திமுக ஆட்சி அமைந்த பிறகு பாஜக – திமுக இடையே கருத்தியல் ரீதியானம் அதுபோல் தமிழக மக்களின் நன்கு அறிந்ததே. அரசின் பல துறைகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை மாநில தலைவர் அண்ணாமலை முன்வைத்து வந்தார். இந்த நிலையில் தான் ஏப்ரல் 14ஆம் தேதி திமுகவில் சொத்து பட்டியல்களை வெளியிடப் […]

பாஜக அல்லாத பிற மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். முதல்வர் ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில்; இந்தியாவில் மக்களாட்சி இன்று முக்கியமான கட்டத்தில் உள்ளது. நமது நாட்டில் கூட்டாட்சித் தத்துவம் என்பது படிப்படியாக மறைந்து வருவதைக் காண்கிறோம். மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநரின் கடமைகள் குறித்தும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடமைகளையும், பொறுப்புகளையும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள போதிலும், அவைகள் இப்போது மதிக்கப்படுவதோ அல்லது […]

பாஜகவில் இருந்து அடுத்தடுத்து விலகிய ஐ.டி. விங் நிர்வாகிகளை அதிமுகவில் இணைத்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவில்பட்டியில் பாஜகவினர் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது செய்தனர். பாஜக-வின் ஐ.டி. விங் மாநில தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார், மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கட்சியில் இருந்து விலகுவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்த சில நிமிடங்களிலேயே எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் […]

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக திமுக அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த சில நாட்களுக்கு முன் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இந்நிலையில் மேகலாயா, திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனுடன் ஈரோடு கிழக்கு […]

பாஜகவில் அண்ணாமலை இணைந்த பிறகு வீடியோ, ஆடியோ கலாச்சாரம் பெருகிவிட்டதாக நடிகை காயத்ரி ரகுராம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பாஜகவில் நீடிக்கும் வீடியோ, ஆடியோ கலாச்சாரத்தால் பல பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் எனவும், வீடியோ, ஆடியோ பிரச்சனை குறித்து அண்ணாமலையிடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று  குற்றம்சாட்டியுள்ளார். பாஜகவில் அண்ணாமலை இணைந்த பிறகுதான் வீடியோ, ஆடியோ கலாச்சாரம் பெருகிவிட்டதாகவும், தமிழக பாஜகவில் நிலவும் […]