ஜனவரியில் பொங்கல் பண்டிகையின் போது ரயில்களில் சொந்த ஊர் செல்வதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. வரும் 2026-ல் ஜனவரி 13-ம் தேதி போகிப் பண்டிகை, 14-ல் தைப்பொங்கல், 15-ல் மாட்டுப் பொங்கல், 16-ல் உழவர் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்தும் பல லட்சம் பேர் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். ஜனவரி 12-ம் தேதி திங்கள்கிழமையும் விடுப்பு கிடைக்கும் சூழல் உள்ளவர்கள், 9-ம் […]