பிரதம மந்திரியின்‌ உணவு பதப்படுத்தும்‌ குறு நிறுவனங்களை முறைப்படுத்தும்‌ திட்டம்‌ 2021 முதல் 2025 ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தி வருகிறது மத்திய அரசு. இத்திட்டத்தில்‌ மானியம்‌ மத்திய அரசின்‌ 60 சதவீதம்‌ மற்றும்‌ மாநில அரசின்‌ 40 சதவீதம்‌ நிதி பங்களிப்புடன்‌ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில்‌ ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளை பொருள்‌ என்ற முறையிலும்‌ மற்றும்‌ அனைத்து உணவு சார்ந்த தொழில்களுக்கும்‌ (புதிய மற்றும்‌ விரிவாக்கம்‌) செயல்படுத்தப்படுகிறது. […]

தமிழக அரசின்‌ படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ UYEGP திட்டத்தின்‌ கீழ்‌ வியாபாரம்‌ சார்ந்த தொழில்கள்‌ துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகையும்‌ மானிய தொகையும்‌ உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தில்‌ அதிகபட்சமாக ரூ.5 லட்சம்‌ வரை வங்கியில்‌ கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம்‌ அதிகபட்சமாக ரூ.1.25 லட்சத்தை பெறலாம்‌ என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய அரசாணை படி அதிகபட்சமாக ரூ.15 லட்சம்‌ வரை வங்கியில்‌ கடன்பெற்று அதற்கு 25 […]

உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் சொந்தமாக எந்த உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளையும் அமைக்கவில்லை. இருப்பினும், மத்திய துறைத் திட்டங்களான பிரதமரின் வேளாண்-கடல் பதப்படுத்துதல் மற்றும் வேளாண் பதப்படுத்தும் தொகுப்புகளின் மேம்பாட்டுக்கான திட்டம்(பி.எம்.கே.எஸ்.ஒய்.), உணவுப் பதப்படுத்தும் தொழிலுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துகிறது. இவற்றின் மூலம் இத்தகைய தொழில்களை அமைப்பதை அரசு ஊக்குவிக்கிறது. தொழில்வளம்‌ பெருகுவதற்கான இணக்கச்‌ சூழலை மேம்படுத்துவதிலும்‌ அதன்‌ மூலம்‌ கட்டமைப்பான வேலைவாய்ப்புகளை […]