இந்திய அரசு 15-6-1999ல் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் பட்டியல்கள் தொடர்பான ஆணைகளில் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்துதல் ஆகியவற்றிற்கான கோரிக்கைகளை முடிவு செய்வதற்கான வழிமுறைகளை வகுத்துத் தந்துள்ளது (இது மேலும் 25-6-2002 மற்றும் 14-9-2022ல் திருத்தப்பட்டது). இந்த வழிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட மாநில அரசு / யூனியன் பிரதேச நிர்வாகம் நியாயப்படுத்தி பரிந்துரைத்துள்ள மற்றும் இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் ஆகியவற்றால் ஒப்புக்கொள்ளப்பட்ட முன்மொழிவுகள் மட்டுமே பரிசீலிக்கப்பட்டு […]

மாணவர்களின் சாதியை வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் குறிப்பிடக் கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் சாதிப் பெயர்களை ரகசியமாக ஆசிரியர்கள் வைக்க வேண்டும். மாணவர்களின் சாதியை வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் குறிப்பிடக் கூடாது. ஆசிரியர்கள் மாணவர்களின் சாதி பெயரை மறைமுகமாக கூட அடைப்புக்குறிக்குள் குறிப்பிடக் கூடாது. சாதியை வெளிப்படுத்தும் வகையில் கைகளில் மாணவர்கள் பட்டைகள் அணிய தடை. சாதிய குறியீடுகளை வெளிப்படுத்தும் வகையில் சைக்கிளில் […]