ஜூலை மாதம் அரசு ஊழியர்களைத் தவிர வேறு யார் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பார்கள் சொல்லுங்க.. ஏன் என்றால், மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு மட்டுமின்றி, அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் பென்சன் உயர்வு இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மத்திய அரசு, அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை ஆண்டுக்கு இரண்டு முறை உயர்த்துகிறது. முதலாவது ஜனவரியிலும் இரண்டாவது ஜூலையிலும் அகவிலைப்படி உயர்வைக் கொடுக்கும். […]