பசுமை எரிசக்திக்கு முக்கியமான கிராஃபைட், சீசியம், ரூபிடியம் மற்றும் சிர்கோனியம் கனிமங்களின் ராயல்டி விகிதங்களை சீரமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சீசியம், கிராஃபைட், ரூபிடியம் மற்றும் சிர்கோனியம் ஆகியவற்றின் ராயல்டி விகிதத்தை பின்வருமாறு குறிப்பிட/திருத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. உற்பத்தி செய்யப்படும் தாதுவில் உள்ள சீசியம் உலோகத்தின் மீது விதிக்கப்படும் சீசியம் உலோகத்தின் சராசரி விற்பனை விலையில் ராயல்டி விகிதம் […]

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தற்போது நடைமுறையில் உள்ள தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்களுக்கு இடையேயான ஒழுங்குமுறை நெறிமுறைகள் குறித்த மதிப்பீடுகள் என்ற தலைப்பில் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையச் சட்டம் 1997 பிரிவு 11 (1) (பி) பிரிவின்படி, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்களுக்கிடையேயான தொடர்புகள் குறித்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை விதிப்பதற்கு […]

மத்திய / மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்களுக்கு மின்னணு ஆயுள் சான்றிதழ் வீடு தேடி வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள், மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், ராணுவ ஓய்வூதியதாரர்கள், மற்றும் இதர ஓய்வூதியதாரர்கள், நவம்பர் 1-ம் தேதி முதல் தங்கள் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்கும் படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே, மின்னணு […]

6-வது தேசிய நீர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்திற்கு 4 விருதுகள் கிடைத்துள்ளன. டெல்லியில் உள்ள ஷ்ரம் சக்தி பவனில் மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் சி.ஆர் பாட்டீல், 6-வது தேசிய நீர் விருதுகள் பெறுவோரின் பட்டியலை வெளியிட்டார். 2024-ம் ஆண்டுக்கான இந்த விருதுகள், சிறந்த மாநிலம், சிறந்த மாவட்டம், சிறந்த ஊராட்சி, சிறந்த உள்ளாட்சி அமைப்பு, சிறந்த பள்ளி அல்லது கல்லூரி, சிறந்த தொழிற்சாலை, சிறந்த நீர்நிலைப் பயன்பாட்டாளர் […]

தமிழ்நாடு பல்லுயிர் பெருக்க வாரியத்திற்கு ரூ.16,79,482 விடுவிக்கப்பட்டுள்ளது. தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையம் மாநிலங்களுக்கு ரூ.43.22 லட்சம் மதிப்பிலான காப்புரிமையுடன் கூடிய அணுகல் மற்றும் பயன் பகிர்வு நிதியை விடுவித்துள்ளது. இந்திய உயிரியல் வளங்களை பயன்படுத்தி காப்புரிமைகளை பெறுவதற்கும், புதுமை கண்டுபிடிப்புகளை வர்த்தக மயமாக்குவதற்கும், அறிவுசார் சொத்துரிமை பயன்பாடுகளிலிருந்து இந்த நிதி உருவாக்கப்பட்டது. ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், கோவா, குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, […]

பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த தொழிலாளர் எண்ணிக்கை விகிதம் 2025-ம் ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2-வது காலாண்டில் சிறிதளவு அதிகரித்து 55.1 சதவீதமாக உள்ளது. இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் சிறிது அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில், பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 33.7 சதவீதமாக உள்ளது. இது […]

மத்திய பணியாளர், பொது குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை சார்பில் நாடு தழுவிய டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான முகாம், நவம்பர் 1-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் அதிகாரம் வழங்குவதையும் நோக்கமாக கொண்டு மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த பிரச்சார இயக்கத்தின் […]

வந்தே மாதரம் பாட தமிழக அரசாங்கம் மறுத்துள்ளது என பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். 2025-ம் ஆண்டு வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகளைக் குறிக்கிறது. பங்கிம்சந்திர சட்டர்ஜி எழுதிய நமது தேசியப் பாடலான “வந்தே மாதரம்”, 1875-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி அக்ஷய நவமி அன்று எழுதப்பட்டது. வந்தே மாதரம் முதன்முதலில் இலக்கிய பத்திரிகையான பங்கதர்ஷனில் அவரது ஆனந்தமத் நாவலின் ஒரு பகுதியாக வெளியானது. தாய்நாட்டை […]

தேசிய நெடுஞ்சாலைக் கட்டண (விகிதங்களை நிர்ணயித்தல் மற்றும் வசூலித்தல்) (மூன்றாவது திருத்தம்) விதிகள், 2025, வரும் 2025 நவம்பர் 15 முதல் நடைமுறைக்கு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட்டேக் இல்லாத பயனர்களிடையே டிஜிட்டல் முறையிலான கட்டணங்களை ஊக்குவிக்கவும், ரொக்கப் பரிவர்த்தனைகளை முற்றிலுமாக அகற்றும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டண (விகிதங்களை நிர்ணயித்தல் மற்றும் வசூலித்தல்) விதிகள், 2008-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. புதிய விதியின்படி, செல்லுபடியாகும் மற்றும் செயல்படும் […]

ஓய்வூதியதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான புதிய முறைகளை அறிமுகப்படுத்துவதில் மத்திய அரசு பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக, பஞ்சாப் நேஷனல் வங்கியின் டெல்லி சன்சாத் மார்க் கிளை சார்பில் தேசிய அளவிலான டிஜிட்டல் ஆயுள் சான்றிதளுக்கான பிரச்சாரம் 4.0 – ன் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்டமான முகாமை ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறைசெயலாளர் ஸ்ரீனிவாஸ் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் […]