fbpx

தமிழகத்திற்கான ரயில்வே பட்ஜெட் 8 மடங்கு அதிகரித்துள்ளது என மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

2024-25 மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை வெளியிட்டு சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர். தமிழ்நாட்டிற்கு இந்த பட்ஜெட் தொலைநோக்கு பார்வை கொண்டதாகவும், பிரதமர் மோடியின் இந்தியா 2047 தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப அமைந்துள்ளதாகவும் அவர் விவரித்தார். ரயில்வே …

மத்திய அரசின் தேயிலை மேம்பாடு மற்றும் ஊக்குவிப்புத் திட்டம் இந்திய தேயிலையின் உற்பத்தி, உற்பத்தித்திறன் மற்றும் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர்; 2023-24 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் தேயிலை மேம்பாடு மற்றும் ஊக்குவிப்புத் திட்டமானது சிறு …

பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கங்கள், திரைப்படத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசின், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின், ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு, 2024-2025-ம் நிதி …

தொழில் தொடங்குவதை எளிதாக்க, ஏற்றுமதி ஊக்குவிப்பு மூலதன சரக்குகள் திட்ட நடைமுறைகளை மத்திய அரசு எளிதாக்கி உள்ளது.

தொழில் தொடங்குவதை எளிதாக்க, ஏற்றுமதி ஊக்குவிப்பு மூலதன சரக்குகள் திட்ட நடைமுறைகளை, வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் எளிமைப்படுத்தியுள்ளது. பரிவர்த்தனை செலவுகளை குறைத்து, எந்திரமயமாக்கலை ஊக்குவிப்பதன் மூலம், ஏற்றுமதியாளர்கள் பயனடையும் விதமாக இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழில் …

நீதித்துறை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு ரூ.11,294.80 கோடி நிதிய ஒதுக்கியுள்ளதாக நீதித்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் கூறியுள்ளார். இதன்படி தமிழ்நாட்டுக்கு ரூ.433.79 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், அதில் ரூ.398.89 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது, மீதமுள்ள தொகை பயன்படுத்தப்படவில்லை என்றார். புதுச்சேரிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.71.95 கோடியில், ரூ.65.41 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

நீதித்துறையின் …

வனவிலங்கு தாக்கி உயிரிழப்போரின் குடும்பத்திற்கான கருணைத் தொகை ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையே ஏற்படும் மோதலை குறைக்கவும், பழிவாங்கும் நோக்கத்தோடு யானைகள் கொல்லப்படுவதை தவிர்க்கவும், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. காட்டு யானைகளால் ஏற்படும் சொத்து சேதம், உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில், 2023, டிசம்பர் …

ராமேசுவரம்-தனுஷ்கோடி திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது. ஆனால் நிலம் எடுப்பு பிரச்சினைகளால் அந்த திட்டத்தை கைவிடுவதாக தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2014 முதல் 2024 வரையிலான பத்து ஆண்டுகளில் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட தமிழ்நாட்டில், 1,302 கிமீ தொலைவுக்கு புதிய ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டிருப்பதுடன் 2,152 …

மத்திய ஆயுத காவல்படை, அசாம் ரைஃபிள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 10,45,751 வீரர்களில் 01.07.2024 நிலவரப்படி, 84,106 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதனை நிரப்புவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் பேசிய அவர்; மத்திய ஆயுத காவல்படை, அசாம் ரைஃபிள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 10,45,751 வீரர்களில் 01.07.2024 …

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், டிராஸ்டுஜுமாப் டெரக்ஸ்டெக்கான், ஒசிமெர்டினிப், துர்வாலுமாப் ஆகிய மூன்று முக்கிய புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு அளிப்பதாக அறிவித்தார்.

நாட்டில் 27 லட்சம் புற்றுநோயாளிகள் இருப்பதைக் கருத்தில் கொண்டு இந்தக் கோரிக்கையை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் நிதி அமைச்சகத்துக்கு …

நாட்டின் எந்த மாவட்டத்திலும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை பின்பற்றப்படுவதாக தகவல் இல்லை என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர்; நாடாளுமன்றம் இயற்றிய ‘கையால் மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களை பணியமர்த்துவதை தடை செய்தல் மற்றும் அவர்களின் …