சீன இணைப்புகளுடன் கூடிய 138 ஆன்லைன் சூதாட்ட செயலி, 94 லோன் செயலியை தடை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் தகவல்களின் பேரில், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 138 பந்தய பயன்பாடுகள் மற்றும் 94 கடன் வழங்கும் சீன செயலிகளை தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. “இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பாதகமான பொருள்” இருப்பதால், இந்த செயலிகள் ஐடி சட்டத்தின் பிரிவு 69 கீழ் நடவடிக்கை […]
central govt
சீனாவுடன் தொடர்புடைய 138 பந்தய செயலிகள் மற்றும் 94 கடன் வழங்கும் செயலிகளை தடை செய்யும் செயல்முறையை மத்திய அரசு தொடங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. 6 மாதங்களுக்கு முன்பு, மத்திய உள்துறை அமைச்சகம் 28 சீன கடன் வழங்கும் செயலிகளை பகுப்பாய்வு செய்யத் தொடங்கியது. இந்த செயலிகள், பெரும்பாலும் தனிநபர்களை மிகப்பெரிய கடனில் சிக்க வைக்கும் வகையில் உள்ளன.. மேலும் அவை உளவு மற்றும் பிரச்சாரத்திற்கான கருவிகளாகவும் தவறாகப் […]
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நியமன செயல்முறை தொடர்பாக அரசாங்கத்திற்கும் நீதித்துறைக்கும் இடையே நடந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்திற்கான ஐந்து நீதிபதிகளின் பெயரை மத்திய அரசு சனிக்கிழமை அனுமதித்தது. உச்ச நீதிமன்ற கொலீஜியம் அவர்களின் பெயர்களை உயர் நீதிமன்றங்களில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு உயர்த்த டிசம்பர் 13ஆம் தேதி பரிந்துரைத்தது. இது குறித்து மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது ட்விட்டர் பக்கத்தில், […]
2020-21 –ஆம் ஆண்டைவிட 2021-22-ஆம் நிதியாண்டில் வாகனங்கள் ஏற்றுமதி 35.9% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2020-21-ம் நிதியாண்டில் மொத்தம் 41,34,047 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், 2021-22-ம் நிதியாண்டில், 56,17,246 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது 35.9% உயர்வாகும். இதில் கார்களைப் பொறுத்தவரையில் 2020-21-ம் நிதியாண்டில் 4,04,394 என்ற எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யப்பட்டன. 2021-22-ம் நிதியாண்டில், 5,27,875 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதன் மூலம் கார்களின் ஏற்றுமதி 42.9% அதிகரித்த […]
2024 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பமும் குழாய் இணைப்பு மூலம் குடிநீரைப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில், மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து, 2019 ஆகஸ்ட் முதல், ஜல் ஜீவன் இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த இயக்கம் அறிவிக்கப்பட்ட நேரத்தில், 3.23 கோடி கிராமப்புறக் குடும்பங்கள் குழாய் இணைப்புகளை பெற்றிருந்தன. இதுவரை, 7.81 கோடிக்கும் அதிகமான கிராமப்புறக் குடும்பங்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் […]
நீதிமன்றங்களின் வேலை நேரம், வேலை நாட்கள் மற்றும் விடுமுறைகள் ஆகியவை அந்தந்த நீதிமன்றங்களால் உருவாக்கப்பட்ட விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார். மாநிலங்களவையில் பேசிய அவர்; உச்ச நீதிமன்றம், இந்திய அரசியலமைப்பின் 145 வது பிரிவின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, நீதிமன்றத்தின் நடைமுறை மற்றும் அதன் அமர்வுகள் மற்றும் விடுமுறைகளை உள்ளடக்கிய நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை உருவாக்குகிறது. அதன்படி, உச்ச நீதிமன்ற விதிகள், […]
தனிநபர்களுக்கான அதிக கூடுதல் வரிவிகிதாசாரத்தைக் குறைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில், ஆண்டு வருமானம் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ள தனிநபர்களுக்கான அதிக கூடுதல் வரிவிகிதாசாரத்தைக் குறைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது 37 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது அரசுசாரா நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அரசுத்துறையில் பணிபுரிபவர்களுக்கு நிகராக விடுப்புத் தொடர்பான பணமாக்குதல் ஓய்வு பெறும்போது 25 லட்சம் ரூபாய் வரையில் வரிவிலக்கு பெற முடியும். இதுவரையில்.3 லட்சம் ரூபாய் […]
கடந்த ஆறாண்டுகளில் 4.6 சதவீத வருடாந்திர வளர்ச்சியுடன் வேளாண் துறை தொடர்ந்து மேல்நிலையில் உள்ளது. இதனால், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி, மேம்பாடு, உணவுப்பாதுகாப்பு ஆகியவற்றுக்கு வேளாண் துறையும் அதன் துணைத் தொழில்களும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்திருப்பதாக பொருளாதார ஆய்வறிக்கை 2022-23-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2021-22-ல் இதன் மதிப்பு 50.2 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. 2022-23-ல் வேளாண் கடனுக்கு ரூ.18.5 லட்சம் […]
மத்திய அரசின் MTS பணிக்கு விண்ணப்பிக்க வரும் 17-ம் தேதி கடைசி நாள் ஆகும். மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தால் 12,523 MTS (Multi-Tasking Staff) காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு www.ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள்:17.02.2023 ஆகும். இத்தேர்விற்கான கல்வித்தகுதி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி ஆகும். மேலும், 01.01.2023 அன்றைய நிலையில் எஸ்.சி. எஸ்.டி பிரிவினர் 30 வயதுக்குள்ளும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் […]
பிரதான் மந்திரி முத்ரா கடன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கும் நிதியுதவி குறித்து சமூக வலைதளங்களில் வேகமாக ஒரு செய்தி பரவி வருகிறது.. அந்த செய்தியில் “ முத்ரா கடன் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட கடனின் விவரங்கள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட விண்ணப்பதாரருக்கு 5 சதவீத வட்டி விகிதத்தில் 36 மாத காலத்திற்கு ரூ.1 லட்சம் கடனாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடன் ஒப்பந்தக் கட்டணமாக ரூ.1,750 செலுத்தினால் ரூ.1 […]