தொலைத்தொடர்புத் துறையின் தமிழ்நாடு வட்டம் சார்பில் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு முகாம் செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்புத் துறையின் தமிழ்நாடு வட்டம் சார்பில் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு முகாம் 2025 செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முறையான அறிவிக்கை, அதிகாரப்பூர்வ இணையதளமான www.cgca.gov.in/ccatn என்ற தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த குறைதீர்ப்பு முகாம் 12.09.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 […]
central govt
தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், மத்திய அரசுப் பணியாளர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை தேர்வு செய்வதன் மூலம் கிடைக்கும் பயன்கள் தொடர்பான ஒழுங்குமுறை விதிகள் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய குடிமைப் பணிகளுக்கான (தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல்) விதிகள் 2025-ன்படி மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை மத்திய அரசிதழில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு 2024 ஆகஸ்ட் […]
வேலைவாய்ப்புத் தொடர்பான மோசடியான இணையதளங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; மத்திய அரசின் சார்பில் பணியாளர் சேர்ப்புக்காக https://viksitbharatrozgaryojana.org/ மற்றும் https://pmviksitbharatrozgaryojana.com/ என்ற இணையதளங்களில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாக மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்த இணையதளங்களுக்கும் அமைச்சகத்துக்கும் எந்தத் […]
மீலாது நபி, தொடர் விடுமுறையையொட்டி 2,470 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; இன்று சுபமுகூர்த்த நாள், நாளை மீலாது நபி, செப்.6,7 வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று மற்றும் நாளை 1,115 […]
ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைக்கு பின்பான வரி குறைப்பு செப்டம்பர் 22-ம் தேதி முதல் அமலாகும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்தார். இது தொடர்பாக பிரதமர் தலைமையில் மூத்த மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன்பிறகு, பல்வேறு மாநிலங்களின் நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா […]
தொழில்வளம் பெருகுவதற்கான இணக்கச் சூழலை மேம்படுத்துவதிலும் அதன் மூலம் கட்டமைப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் உறுதி கொண்டுள்ள தமிழ்நாடு அரசு சுயதொழில் புரிவதில் ஆர்வம் கொண்டோர் உதவி பெறத்தக்க மானியத்துடன் கூடிய கடனுதவித் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் ஒன்று, மத்திய அரசின் 60% நிதிப்பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் “பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டம் ஆகும்.. மசாலா பொருட்கள் தயாரித்தல், காப்பிக் கொட்டை அரைத்தல், அரிசி […]
ரயில்வே ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட காப்பீட்டு சலுகைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியன் ரயில்வே மற்றும் பாரத ஸ்டேட் வங்கி கையெழுத்தானது. உலகின் மிகப்பெரிய ரயில் வலையமைப்புகளில் ஒன்றான இந்தியன் ரயில்வே மற்றும் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஆகிய இந்தியாவின் இரண்டு முன்னணி நிறுவனங்களிடையே இன்று ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே, தகவல் ஒலிபரப்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் […]
பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து உரிமைகோர அல்லது ஆட்சேபம் தெரிவிக்க இன்று ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து உரிமைகோரல் அல்லது ஆட்சேபம் தெரிவிக்க இன்று கடைசி நாள் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஆகஸ்ட் 1 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து ஆகஸ்ட் […]
நாடு முழுவதும் இன்று முதல் ஸ்பீட் போஸ்ட் ( விரைவு அஞ்சல்) மூலம் தான் அனுப்ப வேண்டும். பதிவு செய்யப்பட்ட அஞ்சல் சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இன்று முதல், தபால் துறை, செயல்பாடுகளை நெறிப்படுத்தவும் செயல்திறனை மேம்படுத்தவும், விரைவு அஞ்சல் மற்றும் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் சேவைகளை நினைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முக்கிய பதிவு செய்யப்பட்ட அஞ்சல் அம்சங்களைச் சேர்ப்பதற்கும் கட்டணங்களில் திருத்தம் செய்வதற்கும் வாடிக்கையாளர்கள் […]
தமிழ்நாடு கெட்டுக் குட்டிச் சுவரானதை மறைக்க, எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் பழிபோடுகிறார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பொறுப்பைத் தட்டிக்கழிப்பதிலும், அதை அடுத்தவர்கள் தலையில் ஏற்றி வைப்பதிலும், உலக அரசியல் தலைவர்களிலேயே முதல் இடத்தை வகிப்பவர்தான் ஏமாற்று மாடல் அரசின் முதல்வர் ஸ்டாலின் என்பதை அவரே பல விதங்களிலும் நிரூபித்து வருகிறார். அமெரிக்க அரசு தற்போது […]

