நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 5ஜி மொபைல் சேவைகள் வழங்கப்பட்டு வருவதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் பெம்மசானி சந்திரசேகர் ; நாடு முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரையிலான கால கட்டத்தில் 4.86 லட்சம் 5ஜி அலைக்கற்றை பரிமாற்ற நிலையங்களை தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களால் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் […]

மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோர்களின் உடல்நிலையை கவனிக்க 30 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெற்றோர்களை கவனிக்க அரசு ஊழியர்கள் விடுப்பு எடுக்க ஏதேனும் வழிமுறை உள்ளதா என்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்; மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு, 20 நாட்கள் அரைச் சம்பள விடுப்பு, 8 நாட்கள் தற்செயல் […]

சிறு மற்றும் அடித்தட்டு விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசு, ‘பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா’ திட்டத்தில் இணையும் விவசாயிகளுக்கு, 60 வயது நிறைவடைந்த பின், மாத ஓய்வூதியமாக ரூ.3,000 வழங்கப்படும். செப்டம்பர் 12, 2019 அன்று தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி கிசான் மன்தன் யோஜனா (PM-KMY) நாடு முழுவதும் உள்ள அனைத்து நில உரிமையாளர் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் (SMF) சமூகப் பாதுகாப்பை வழங்கி வருகிறது. இந்த […]

ரயில் நிலையங்களில் ‘ரீல்ஸ்’ எடுத்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ரெயில் நிலையங்கள், ரயில் பெட்டிகள், தண்டவாளங்களில் ரீல்ஸ் எடுத்து பதிவிடும் பழக்கம் அதிகமாகி வருகிறது. ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் நின்றுகொண்டு ரீல்ஸ் எடுப்பதால் சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க ரயில்வே துறை […]

இந்திய அரசு 15-6-1999ல் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் பட்டியல்கள் தொடர்பான ஆணைகளில் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்துதல் ஆகியவற்றிற்கான கோரிக்கைகளை முடிவு செய்வதற்கான வழிமுறைகளை வகுத்துத் தந்துள்ளது (இது மேலும் 25-6-2002 மற்றும் 14-9-2022ல் திருத்தப்பட்டது). இந்த வழிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட மாநில அரசு / யூனியன் பிரதேச நிர்வாகம் நியாயப்படுத்தி பரிந்துரைத்துள்ள மற்றும் இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் ஆகியவற்றால் ஒப்புக்கொள்ளப்பட்ட முன்மொழிவுகள் மட்டுமே பரிசீலிக்கப்பட்டு […]

பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 6,44,600 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 17.07.2025 வரை, தமிழ்நாட்டில் 9,57,825 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 7,43,299 வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 6,44,600 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழக அரசால் மொத்தம் 59,121 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதே காலகட்டத்தில் […]

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் நிதியாண்டு 2024-25 இல் 74.34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் நிதியாண்டு 2024-25 இல் 74.34 லட்சம் பேர் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளார்கள். நிதியாண்டு 2023-24 இல் இந்த எண்ணிக்கை 79.39 லட்சமாகவும், நிதியாண்டு 2022-23 இல் 75.79 லட்சமாகவும் இருந்தது.இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய […]

60 வயதுக்கு மேற்பட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.8,000 நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மக்களவையில் நேற்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலின் விவரம்: நாடு முழுவதும் தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கைத்தறி நெசவாளர்கள், பணியாளர்களின் நலன்களுக்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஆண்டுதோறும் ரூ.1 லட்சத்துக்கும் குறைவான வருவாய் கொண்ட 60 […]

கடந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை ஜூலை 31-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 15-ம் தேதி வரையில் நீட்டித்துள்ளது வருமான வரித்துறை. கடந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை ஜூலை 31-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 15-ம் தேதி வரையில் நீட்டித்துள்ளது வருமான வரித்துறை. வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பான படிவங்கள் மற்றும் டிடிஎஸ் […]

உயரமான பகுதியில் ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பின் சோதனை வெற்றிக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பின் உயரமான பகுதிகளில் இலக்குகளை தாக்கும் பரிசோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. லடாக்கில் நேற்று முன்தினம் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பை 4,500 மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்த முடியும். இது 25 முதல் 30 கிலோமீட்டர் தொலைவில் […]