இந்தியாவில் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டை விரிவுபடுத்தும் நோக்கில், 100 சதவீதம் வரை எத்தனாலைப் பயன்படுத்தி இயங்கக்கூடிய வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், மத்திய மோட்டார் வாகன விதிகளில் திருத்தங்களை அறிவித்துள்ளது. இதன் மூலம் E100 எரிபொருளில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட வாகனங்களுக்கான விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. E100 என்பது கிட்டத்தட்ட முழுமையாக எத்தனாலைக் கொண்ட எரிபொருள் ஆகும். […]