சென்னை ரிப்பன் மாளிகை முன்பு 7 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் கலைந்து செல்ல காவல்துறை உத்தரவு. போராட்டத்தை தொடர்வதால் பொது அமைதி, பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுகிறது. உத்தரவை மீறி போராட்டத்தை தொடர்ந்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை எச்சரிக்கை. சென்னை மாநகராட்சியில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்கள் மற்றும் அம்பத்தூர், அண்ணாநகர் மண்டலங்களில் சில வார்டுகள் தவிர மற்ற பகுதிகளில் தூய்மைப்பணி தனியாரிடம் விடப்பட்டுள்ளது. […]
chennai corporation
Happy news for motorists.. Parking fees canceled in Chennai..!! – Corporation announcement
சென்னையில் 8 இடங்களில் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளித்து மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள மயானங்கள் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமைகளில் தீவிர தூய்மை பணிகள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. எனினும் பல்வேறு […]
சென்னையில் ரூ.489.22 கோடியில் 3,987 சாலைகள் அமைக்கும் பணிகளை ஜூலை 31-ம் தேதிக்குள் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியால் 418.56 கி.மீ. நீளமுடைய 488 பேருந்து தடச் சாலைகள் மற்றும் 5,653.44 கி.மீ. நீளமுடைய 35,978 உட்புற சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் கடந்த 4 ஆண்டுகளில் 266 கி.மீ. நீளத்துக்கு 375 பேருந்து சாலைகள், 2,170 கி.மீ. நீளத்துக்கு 13,909 உட்புறச் சாலைகள் உள்ளன. […]
சென்னையில் பல்வேறு பகுதிகளில் இயங்கும் விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையங்களில் உதவியாளராக பணிப்புரிய தற்போது தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு: உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 45 வயதிற்கு கீழ் இருக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வித்தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் NGO/விலங்குகளுக்கான பாதுகாப்பு தங்குமிடம் அல்லது விலங்கு பாதுகாப்பு பணிகளில் அனுபவம் பெற்றிருக்க […]
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில்; அனைத்து விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான அனுமதி விண்ணப்பங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக மட்டுமே சமர்ப்பிப்பதற்கான நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பித்தல், தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்தல், ஆன்லைனில் கட்டணம் செலுத்தல், விண்ணப்ப நிலையை […]

