மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை 5.52 மணி அளவில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோரிப்பாளையம் மதிச்சியம் பகுதியில் கள்ளழகரை தரிசிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். அதோடு அங்கே காவல் துறையினரும் குவிக்கப்பட்டனர். இத்தகைய நிலையில், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்கு முன்பாக அதிகாலை 4 மணி அளவில் மதுரை அரசு மருத்துவமனை வினவருக்கு செல்லும் பகுதியில் 2 குழு மோதிக்கொண்டது. […]